“என்னய்யா இப்படி இருக்கிங்க?.. சமி விக்கெட் எடுக்க வெட்கப்படறதே இல்ல..!” – சோயப் அக்தர் ஆச்சரியமான பரபரப்பு பேச்சு!

0
1315
Akthar

நேற்று இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வென்றது மூலமாக தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு முகமது சமி முதுகெலும்பாக விளங்கினார். நடப்பு உலகக் கோப்பையில் கிடைத்த முதல் வாய்ப்பை அவர் மிகவும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இறுதிக்கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றியதின் மூலம் நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். மேலும் மொத்தமாக ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி உலகக் கோப்பையில் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதேபோல் பேட்டிங்கில் விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் அடித்து முக்கிய காரணமாக நின்றார். அழுத்தமான சூழ்நிலையில் அவர் விளையாடிய விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்தது.

இதுகுறித்து பாகிஸ்தானின் சோயப் அக்தர் கூறும் பொழுது “முந்தைய போட்டியில் அவர் எப்படி விளையாடினாரோ அதேபோல் தற்பொழுதும் நியூசிலாந்துக்கு எதிராக செல்வது போல் இருந்தது. அவர் சச்சினின் சத சாதனையை சமன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது ஒருநாள் நடக்கத்தான் போகிறது. அது குறித்து விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

- Advertisement -

விராட் கோலி தன்னை அழுத்தத்தில் வெளிப்படுத்துகின்ற முறை அபாரமாக இருக்கிறது. அந்த நேரத்தில் மீண்டும் ஒரு சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து சேஸ் மாஸ்டராக வருவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறது.

சமி தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்தி ஐந்து விக்கெட் கைப்பற்றி அபாரமாக இருந்தார். இப்பொழுது இந்தியா முழுமையான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறது. மேலும் பேட்டிங் ஃபீல்டிங் என சிறப்பாக இருக்கிறார்கள். மேலும் உள்நாட்டு சூழ்நிலையில் விளையாடுகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது இந்தியா எப்படி வெற்றி பெறாமல் போகும் என்று எனக்கு தெரியவில்லை.

விக்கெட்டுகளை எடுக்க ரிஸ்க் எடுப்பதற்கு சமி வெட்கப்படுவதே கிடையாது. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உலகக்கோப்பையில் ஐந்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண காரியம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!