“இந்திய அணியின் பலவீனங்கள் என்ன?” – ஹேசில்வுட் தந்த ஆச்சரியப்படுத்தும் பதில்!

0
3027
ICT

13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் எது என்பது முடிவுக்கு வந்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியில் விளையாடுகின்றன.

- Advertisement -

நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியின் போது மழை வருவதற்கான வாய்ப்புகளோடு மேகமூட்டமாக இருந்தது. இந்த நேரத்தில் முதலில் பந்து வீசும் வாய்ப்பைப் பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசில்வுட் மற்றும் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து தொடர்ந்து 14 ஓவர்கள் வீசினார்கள். நான்கு முக்கிய விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இவர்கள் இருவரது பந்துவீச்சிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று கூறலாம். மேற்கொண்டு போட்டி நேரத்தை நீட்டிப்பதற்காகத்தான் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு அவர்களுடைய தரத்திற்கு இந்தியாவில் மீண்டும் திரும்ப வந்தது போல் இருந்தது.

- Advertisement -

இந்தியாவுடனான இறுதிப் போட்டி குறித்து பேசி உள்ள ஹேசில்வுட் கூறும் பொழுது “இந்தியாவிடம் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொரு பெட்டியையும் டிக் செய்கிறார்கள்.

ஒரு சிறிய இலக்கை வைத்து இந்தியாவுக்கு எதிராக சென்னையில் விளையாடிய பொழுது சில விரிசல்களை கண்டோம். அவர்களது ஆரம்ப விக்கெட்டுகளை முன்கூட்டியே எடுக்க முடிந்தால் அது அதிர்ஷ்டமானது. ஆனால் இந்திய அணியிடம் உண்மையான பலவீனங்கள் என்று எதுவுமே கிடையாது.

நாங்கள் இறுதி போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினோம். அப்பொழுது ஆடுகளம் முழுமையாக தட்டையாக இல்லாமல் பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைத்தது. இறுதிப் போட்டிக்கும் அப்படியே கிடைத்தால் நன்றாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!