கே.எல் ராகுலின் காயம் பற்றிய விவரங்கள் என்ன? – குர்னால் பாண்டியா பேட்டி!

0
260

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதின . இந்தத் தொடரின் புள்ளிகள் பட்டியலில் லக்ன அணி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் அணி ஆறாவது இடத்திலும் இருந்தது .

டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூர் குறித்த 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது . லக்னோ ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் கேஜிஎஃப் இன் அதிரடி ஆட்டம் எடுபடவில்லை.

- Advertisement -

126 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கினாலும் பெங்களூர் அணியின் திறமையான பந்துவீச்சால் லக்னா அணி 20 அவர்களின் 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . பந்துவீச்சில் பெங்களூர் அணியின் கரண் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் ஹேஷல்வுட் இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர் .

இந்தப் போட்டியின் முதல் பேட்டியில் கலத்தடுப்பின்போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பில்டிங்க்கு மீண்டும் திரும்பி வரவில்லை . இந்நிலையில் அணியின் துணை கேப்டன் ஒரு நாள் குர்னால் பாண்டியா அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தினார் .

போட்டிக்கு பின் பேட்டியளித்த
குர்னால்  பாண்டியா” இந்தப் போட்டியின் முதல் பாதையில் சிறப்பாகவே செயல்படும் சிறப்பான பவுலிங் மூலம் பெங்களூர் அணியை 126 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தோம் . டேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடி இருந்தால் இந்த போட்டியை வெற்றி பெற்றிருக்கலாம் . டேட்டிங் இன் போது எங்களுடைய திட்டங்களை நாங்கள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை . ஆடுகளத்தில் கே.எல் ராகுலுக்கு நடந்தது ஒரு சோகமான சம்பவம் அவருக்கு இடுப்பு நெகிழ்வு ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன் . காயத்திற்கான விவரங்கள் பற்றி இன்னும் தெரியவில்லை . அணியின் மருத்துவர்கள் அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள் . நிச்சயம் பெரிய காயமாக இருக்காது என்று நம்புகிறேன்” என்று கூறினார் .

- Advertisement -