“கோலியை பற்றி என்ன சொல்வது.. அவர் எப்பவும் இதே வேலையாதான் இருக்காரு..!” – கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு பின் பரபரப்பு பேச்சு!

0
3495
Rohit

இந்திய அணி இன்று 20 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வென்றிருக்கிறது.

2019 கடந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்த இந்திய அணியை, இரண்டு நாட்கள் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இன்று இந்தியா அணி அதற்கான ஒரு சின்ன பழிவாங்கலை நடத்தி இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

இதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் ஒரு காலை வைத்துவிட்டது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் கூட அரையிறுதி உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா “உலகக் கோப்பை தொடரில் நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது. ஆனால் பாதி வேலைதான் முடிந்திருக்கிறது. சமி தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் பற்றி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவர் நல்ல தரமும் அனுபவமும் கொண்டவர். நிலைமைகளை நன்கு பயன்படுத்துவார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. பனியும் உள்ளே வந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டதற்கான பெருமை அவர்களையே சேரும்.

நானும் கில்லும் எங்களுடைய பேட்டிங்கில் ஒருவரை ஒருவர் ஆதரித்து களத்தில் விளையாடுகிறோம். இன்று நாங்கள் பெரிய ரன்களுக்கு போகவில்லை ஆனால் அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

விராட் கோலியை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது. அவர் இப்படியான வேலையை தொடர்ந்து பல ஆண்டுகளாக அணிக்கு செய்து வருகிறார். அவர் இந்த வேலையை செய்வதற்கு தன்னை முழுவதுமாக ஆதரித்து நம்புகிறார்.

இறுதியில் சில விக்கெட்டுகளை இழந்ததால் கொஞ்சம் அழுத்தம் வந்தது. ஆனால் விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.

பீல்டிங் என்று நாங்கள் விரும்பியது போல் அமைய கிடையாது. எங்கள் அணியில் கேட்ச் வாய்பை தவறவிட்டவர்கள் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர்கள். நாங்கள் நாட்டின் பல பகுதிக்கும் சென்று விளையாட விரும்புகிறோம். நாங்கள் அவர்களை இதுவரை ஏமாற்றவில்லை, அவர்களும் எங்களை ஏமாற்றவில்லை!” என்று கூறி இருக்கிறார்!