என்ன மனுஷன்யா! “எல்லாத்துக்கும் காரணம் விராட் கோலிதான்” – ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய விஷயம்!

0
374
Viratkohli

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இந்திய வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது!

முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் வென்று இருந்த நிலையில் நேற்று தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு இசான் கிஷான் 77, கில் 85, சஞ்சு சாம்சன் 51, கேப்டன் ஹர்திக் பாண்டியா 70* என நால்வர் அரை சதங்கள் அடித்து அசத்தினார்கள். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 351 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய ஏதுவான ஆடுகளத்தில் 151 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. சர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகள் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
“நான் உண்மையை சொல்வது என்றால் ஒரு கேப்டனாக நான் இதுபோன்ற போட்டிகளையே எதிர்நோக்குகிறேன். இது ஒரு சர்வதேச போட்டி மட்டுமல்ல இதற்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. எங்களுக்கு தெரியும் நாங்கள் இதற்கு முன்னால் தோல்வி அடைந்திருந்தோம். சில ஏமாற்றங்கள் எங்களுக்கு இருந்தது.

- Advertisement -

ஆனால் எங்கள் வீரர்கள் வெளியில் வந்து தங்களது குணத்தை வெளிப்படுத்திய விதம் மற்றும் அவர்கள் இதை ரசித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நான் இப்படிப்பட்ட அணியிலேயே இருக்க விரும்புகிறேன். அழுத்த சூழ்நிலைகளை இவர்கள் உள்வாங்க வேண்டும். அழுத்தத்தை வெற்றி கொள்ளாமல் ஹீரோ ஆக முடியாது.

வெளிப்படையாகவே அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மிக முக்கியமானவர்கள். ஆனால் ருதுராஜ் இல்லை அக்சர் போன்றவர்கள் இங்கு ஒரு ஆட்டத்தை பெறுவது மிக முக்கியமானது. எனவே இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டி இருந்தது. நாம் இந்த இடத்தில் எதையாவது சரி பார்க்க விரும்பினால் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நான் பேட்டிங்கில் கொஞ்ச நேரம் ஆடுகளத்தில் நேரம் செலவழிக்க விரும்பினேன். சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி உடன் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்பொழுது நாங்கள் நிறைய பேசினோம். அவர் எனக்கு பேட்டிங்கில் சில முக்கியமான விஷயங்களை கூறினார். அது அப்படியே என் மூளையில் தங்கி விட்டது. அவர் நான் கிரீசில் நேரம் செலவு செய்து விரும்ப வேண்டும் என்று விரும்பினார்.

வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். எனக்கான ரிதம் கிடைத்ததும் நான் வேலையை முடித்து விட்டேன். நான் எப்பொழுதெல்லாம் பேட்டின் மத்தியில் பண்டுகளை சிறப்பாக வாங்குகிறானோ அப்பொழுதெல்லாம் அங்கு எல்லாம் வித்தியாசமாக மாறுகிறது!” என்று கூறியிருக்கிறார்!