“இந்திய சின்ன பசங்க பாஸ்பால நொறுக்கிட்டாங்க.. ஆனா இந்த இந்திய வீரருக்காக வருத்தப்படறேன்” – பிராட் ஹாக் பேச்சு

0
182
Hogg

இந்த முறை உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் மிகவும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது.

காரணம் என்னவென்றால் விராட் கோலி போன்ற ஒரு பெரிய நட்சத்திர அனுபவ வீரர் இல்லாமல், இங்கிலாந்து அணியை இந்திய இளம் வீரர்கள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதிலும் குறிப்பாக இந்திய அணி முதல் போட்டியில் தோற்று, மிக அதிக விமர்சனங்களை சந்தித்தது. இப்படியான அழுத்தத்தில் இருந்து தான் இந்திய அணி மீண்டு வந்து இரண்டு போட்டிகளை வென்றதோடு, இங்கிலாந்து அணியை எழவிடாமல் வென்று இருக்கிறது.

இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், கில், சர்ப்ராஸ் கான் துருவ் ஜுரல் நால்வரும் பேட்டிங்கில் இங்கிலாந்து அணிக்கு சரியான நேரத்தில் சரியான அழுத்தத்தை உண்டாக்கினார்கள்.

குறிப்பாக இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மிக முக்கியமான நேரத்தில் கில் தனிப்பட்ட அழுத்தத்தில் இருந்தாலும் கூட, அதிலிருந்து வெளியில் வந்து சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, ஜடேஜா, ஜெய்ஸ்வால் என மூவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்க, அறிமுகப் போட்டிகள் விளையாடிய சர்ப்ராஸ் கான் இங்கிலாந்து பந்துவீச்சை அனாயசமாக அடித்து நொறுக்கினார். இன்னொரு பக்கம் மற்றொரு அறிமுகவீரர் துருவ் ஜுரல் மிக புத்திசாலித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னால் வீரர் பிராட் ஹாக் கூறும்பொழுது “இங்கிலாந்து அதிரடியான கிரிக்கெட் பிராண்டை விளையாடுகிறது. ஆனால் இந்திய இளம் வீரர்கள் இடமே அந்த திறமை இருக்கிறது. தங்களுடைய பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு தேவையான ரன்களை அவர்கள் எடுத்துக் கொடுக்கிறார்கள். குறிப்பாக ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியை முடக்கிவிட்டார். சர்பராஸ் கான் இங்கிலாந்து வழியிலேயே பேட்டிங் செய்தார்.

ஜூரல் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறார். நான் கேஎஸ்.பரத்திற்காக வருத்தப்படுகிறேன். ஜூரல் பேட் மற்றும் விக்கெட் கீப்பிங் நல்ல செயல்பாட்டை கொடுக்கிறார். ரிஷப் பண்ட் உடல் தகுதி பெற்று மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறாரா? என்பதை பொறுத்து, சூழலுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.