நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரை சமன் செய்து தப்பித்து இருக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட இரண்டாவது போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று இருந்தது.
கேசி கார்தி மிரட்டல் அடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிந்து துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 3 பந்தில் 1 ரன், எவின் லீவிஸ் 13 பந்தில் 14 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து கேசி கார்தி மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணைந்து அணியை சிறப்பாக விளையாடி மீட்டெடுத்தார்கள். ஷாய் ஹோப் 75 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேசி கார்தி சதம் அடித்து 142 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து படுதோல்வி
இதைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 29.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் அந்த அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்து தப்பித்தது.
இதையும் படிங்க : தோனி எல்லை மீறி போயிட்டீங்க.. அவமானம் நடக்கிறதுக்குள்ள உணர்ந்துடுங்க – முரளி கார்த்திக் அறிவுரை
இந்த போட்டியில் சதம் அடித்திருந்த கேசி கார்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதம் அடித்திருந்த காரணத்தினால், அவரே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்து அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது!






