தற்போது சிஎஸ்கே அணியின் தற்காலிக கேப்டனான தோனி தனக்கு கிடைத்த வரவேற்பை அதிகமாக பயன்படுத்தி விட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங் மிகவும் தடுமாற்றமாக இருந்தது. குறிப்பாக சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவரது ஆட்டம் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்தது. அதே சமயத்தில் கடைசி நேரத்தில் வேகப்பந்து வீச்சிலும் அவரிடம் இருந்து எதிர்பார்த்த ரன்கள் வரவில்லை.
வெளிப்பட்ட தோனி பலவீனம்
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி ஒரு வீரர் கூடுதலாக அணியில் தொடர்வதற்கு இடமளிக்கிறது. இது தோனி போன்ற ஒருவருக்கு மிகவும் உதவி செய்யக் கூடிய விதியாக இருக்கிறது. அதே சமயத்தில் பேட்டிங் வரிசையை நீளமாக வைத்துக் கொண்டு கடைசி இரண்டு ஓவர்களுக்கு மட்டும் தோனி வருவது போல அணியை அமைக்கும் பட்சத்தில் இது சரியாக வரலாம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஏலத்தில் இருந்து நல்ல பேட்டிங் யூனிட்டை கொண்டு வரவில்லை. இதன் காரணமாக தோனி முன்கூட்டியே பேட்டிங் வரவேண்டிய அவசியம் உருவானது. அவர் முன்கூட்டியே பேட்டிங் வந்தபோது சுழல் பந்துவீச்சாளர்கள் அவரை சாதாரணமாக கட்டுப்படுத்தி விட்டார்கள். மேலும் அவர் களத்தில் இருக்கும்பொழுது தைரியமாக கடைசி நேரத்தில் கூட சுழல்பந்து வீச்சாளரை கொண்டு வந்தார்கள். இந்த அளவிற்கு அவருடைய பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டது.
வரவேற்பை அதிகமாக பயன்படுத்தி விட்டார்
இது குறித்து பேசி இருக்கும் முரளி கார்த்தி கூறும் பொழுது ” தோனியை உலகம் மிக அதிகமாக நேசிக்கிறது. அதே சமயத்தில் நாம் சிறந்த விஷயங்களை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதில்லை. அமிதாப்பச்சன் நடிப்பை நிறுத்துவதையோ சச்சின் விளையாடுவதை நிறுத்துவதையோ பார்க்க நாம் விரும்புவது கிடையாது. ஆனால் அவர்களும் வெளியேற வேண்டிய ஒரு நாள் வர வேண்டும்”
இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு சான்ஸ் தரக்கூடாது.. முதல்ல இவருக்கு தான் சான்ஸ் தரணும் – தமிழக வீரர் அபினவ் முகுந்த் கருத்து
“சில நேரங்களில் என்ன நடக்கும் என்றால் உங்களை வெளியே தள்ளுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். மேலும் உங்களை நேசிப்பவர்கள் கூட ‘நாங்கள் கொடுத்த வரவேற்பை நீங்கள் மீறி விட்டீர்கள்’ என்று சொல்வதையும் விரும்ப மாட்டீர்கள். எனவே தோனி தன் ஓய்வை குறித்து சீக்கிரத்தில் முடிவு எடுத்து விட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






