183 ரன்.. 40 பந்தில் மில்லர் தெறி பேட்டிங்.. லிண்டா மாஸ் பினிஷிங்.. பாகிஸ்தான் அணியை வென்றது தென் ஆப்பிரிக்கா

0
3432
Miller

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் டி20 தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முக்கியமான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் முக்கிய வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு ஹென்றி கிளாசன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் அவருடன் அனுபவ வீரர் டேவிட் மில்லர் இருந்தார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

டேவிட் மில்லர் – ஜார்ஜ் லிண்டா அசத்தல்

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 28 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டது. கேப்டன் கிளாசன் 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ஒரு முனையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடிய டேவிட் மில்லர் 40 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் உடன் 82 ரன் குவித்தார். 14 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 136 ரன் எடுத்திருந்தபோது ஆறாவது விக்கெட்டாக டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜார்ஜ் லிண்டா சிறப்பான முறையில் இன்னிங்சை பினிஷிங் செய்து அதிரடியாக 24 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் அப்ரார் அகமத் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

தோனி பாணியில் போராடிய ரிஸ்வான்

பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த சையும் அயூப் மட்டும் அதிரடியாக 15 பந்தில் 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணிக்கு மற்ற யாரும் அதிரடியாக விளையாடவில்லை.

மேலும் பொறுப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் ஆரம்பத்தில் தன்னைவிட அதிக பந்துகளை எடுத்து விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டார். கடைசி கட்டத்தில் அதிரடியில் ஈடுபட்ட அவர் ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார். ஆனால் 18 வது ஓவரை வீசிய ஜார்ஜ் லிண்டா மூன்று விக்கெட் கைப்பற்றி போட்டியை மீண்டும் தென் ஆப்பிரிக்கா பக்கம் எடுத்துச் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க : சிராஜ் ஹெட் பிரச்னை.. நானா இருந்தா இந்திய அணிக்கு.. இனி இதைதான் செய்ய சொல்வேன் – ரவி சாஸ்திரி பேட்டி

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போராடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 62 74 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சிலும் கலக்கிய ஜார்ஜ் லிண்டா 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -