நாங்க செஞ்சிருக்குறது பெரிய சாதனை.. ஏன்னா இந்த விஷயங்கள் அப்படி இருந்தது – ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

0
0

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி இருபத்தி இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வெற்றி மற்றும் ஒட்டுமொத்த தொடர் வெற்றி குறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேட்டி அளித்துள்ளார்.

​இத்தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டுமே முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருந்தன. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை என்றாலும், பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரே திட்டத்துடன் செயல்பட்டு வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர்.

- Advertisement -

​இது குறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேசும்போது “நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளைக் கொண்டிருந்தன. எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை, ஆனால் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரே திசையில் பந்துவீசி திட்டத்தைச் செயல்படுத்தினோம்”

“இந்தத் தொடர் முழுவதும் பேட்டர்களுக்குச் சிறப்பானதாக இல்லை, ஆனாலும் சூழ்நிலைகளைக் கடந்து அணியை வெற்றிபெறச் செய்வதே வீரர்களின் மனநிலையாக இருக்க வேண்டும். அணியில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வது கடினமாக இருக்கலாம். மைதானத்திற்கு வந்து இரு அணிகளையும் ஆதரித்த ரசிகர்களைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் விளையாட்டு வேறு ஒரு நிலைக்கு வளர்ந்து வருகிறது – அனைவருக்கும் மிக்க நன்றி.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -