உலக கிரிக்கெட்

179 ரன்.. அசத்திய வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் ஜோடி.. இலங்கை அணி சொந்த மண்ணில் தோல்வி.. முதல் டி20

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

டி20யிலும் கமிந்து மெண்டிஸ் அபாரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 10 பந்தில் 11 ரன்கள், குசால் மெண்டிஸ் 16 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். மூன்றாவது இடத்தில் வந்த குசால் பெரேரா 3 பந்தில் 6 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியை மீட்ட கமிந்து மெண்டிஸ் 40 பந்தில் 51 ரன்கள், கேப்டன் சரித் அசலங்கா 35 பந்தில் 59 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் ரொமாரியோ செப்பர்டு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அசத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒபனிங் ஜோடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஜோடியான பிரண்டன் கிங் மற்றும் எவின் லீவிஸ் வெறும் 55 பந்தில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். எவின் லீவிஸ் 28 பந்தில் 50 ரன், பிரண்டன் கிங் 33 ரன்கள் எடுத்து அட்டகாசமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க : 4 ரன் 4 விக்கெட்.. ஆஸியிடம் தோற்ற இந்திய அணி.. பாக் கையில் இந்தியா செமி பைனல் வாய்ப்பு.. மகளிர் டி20 உலக கோப்பை

இதைத் தொடர்ந்து பதினைந்து ஓவர்களில் ஆட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை பந்துவீச்சாளர்கள் போட்டியை 20 ஆவது ஓவருக்கு கொண்டு சென்றார்கள். ரோஸ்டன் சேஸ் 16 பந்தில் 19 ரன்கள், ஷர்ஃபான் ரூதர்போர்டு 12 பந்தில் 14* ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் பதிரணா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -
Published by