4 ரன் 4 விக்கெட்.. ஆஸியிடம் தோற்ற இந்திய அணி.. பாக் கையில் இந்தியா செமி பைனல் வாய்ப்பு.. மகளிர் டி20 உலக கோப்பை

0
480
ICT

இன்று மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி மோதியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்கின்ற நெருக்கடியான நிலையில் இந்திய அணி பந்து வீச களம் இறங்கியது.

- Advertisement -

வழக்கம்போல் கலக்கிய ஆஸ்திரேலியா

மகளிர் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அந்த அணிக்கு துவக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 41 பந்தில் 40 ரன்கள், தாகிலா மெக்ராத் 26 பந்தில் 32 ரன்கள், எல்லீஸ் பெரி 23 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள்.

பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கொஞ்சம் மெதுவான கடினமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய பந்து வீச்சு தரப்பில் ரேணுகா சிங் மற்றும் தீப்தி சர்மா இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

ஏமாற்றிய இந்திய அணி

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் ஷபாலி வர்மா 13 பந்தில் 20 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 12 பந்தில் 6 ரன்கள், ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 12 பந்தில் 16 ரன்கள், தீப்தி சர்மா 25 பந்தில் 29 ரன்கள், ரிச்சா கோஸ் 3 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், பூஜா வஸ்ட்ரேகர் இருவரும் களத்தில் நின்றார்கள். இது தொடர்ந்து 19 ஆவது ஓவரில் 14 ரன்கள் வந்தது. 20வது ஓவரில் அடுத்த 14 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க : இது ஒரு உலகளாவிய கேலிக்கூத்து.. எங்க பாகிஸ்தான் டீம்ல இந்த 3 விஷயம் காணாம போயிடுச்சு – டேனிஷ் கனேரியா வருத்தம்

இந்த நிலையில் கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 47 பந்தில் ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தான் மோதும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை உருவாகி இருக்கிறது.

- Advertisement -