“சவால் விடறேன்.. சொந்த நாட்ல டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும்” – டேரன் சமி பேட்டி

0
71
Sammy

2007 ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ஐசிசி உலகக் கோப்பை நடத்தி வருகிறது. இதுவரை மொத்தமாக எட்டு டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன.

முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இந்தத் தொடரைவென்றது. எட்டாவது மற்றும் கடைசி உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி வென்றது.

- Advertisement -

இதற்கு நடுவில் பாகிஸ்தான், இங்கிலாந்து,வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன.

முதன் முதலில் டி20 உலகக் கோப்பை தொடரை இரண்டு முறை கைப்பற்றிய நாடாக வெஸ்ட் இண்டிஸ் அணி இருக்கிறது. டேரன் சமி தலைமையில் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரையும், 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணிவென்று இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிறகு இங்கிலாந்து அணி இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற அணியாக, 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று தன்னைப் பதிவு செய்து கொண்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வருடம் மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதுவரை எந்த நாடும் சொந்த நாட்டில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை.

ஆனால் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளரும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டி20 உலக கோப்பையை கேப்டனாக வென்றவருமான டேரன் சமி, சொந்த நாட்டில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என உறுதியாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் முன்னேறிய விதம், மேலும் 2023 ஆம் ஆண்டு நாங்கள் டி20 கிரிக்கெட் தொடர்களை இழக்காமல் இருந்தது, இதெல்லாம் எங்கள் தன்னம்பிக்கையை மற்றும் வேகத்தை கூட்டுகிறது. சொந்த நாட்டில் நடக்கும் உலக கோப்பையை வெல்லும் முதல் அணியாக நாங்கள் இருப்போம் என நம்புகிறோம்.

இதையும் படிங்க : கடைசி 3 டெஸ்ட்.. நட்சத்திர வீரர் காயத்தால் விலக வாய்ப்பு?.. இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு

எங்கள் வீரர்கள் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. அதே சமயத்தில் உலகம் எங்கும் நடக்கும் பல டி20 லீக்குகளில் விளையாடுகிறார்கள். இந்தியாவில் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தானில் பிஎஸ்என்எல் என தொடர்ந்து விளையாடுகிறார்கள். இதற்கு அடுத்து எங்கள் நாட்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் சொந்த சூழ்நிலையில் விளையாடுவார்கள்” என கூறியிருக்கிறார்.