இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குல்தீப் யாதவ் அரிய சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 175 ரன், கேப்டன் கில் ஆட்டம் இழக்காமல் 129 ரன் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் முதல் முறை
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று போட்டியின் மூன்றாவது நாளில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் இந்த போட்டியில் 80 ஓவர்கள் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இந்த தொடரில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வளவு ஓவர்கள் பேட்டிங் செய்திருக்கிறது.
மேலும் இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 84 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். மற்றொரு இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணி 271 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் பாலோ ஆன் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய விரும்பாமல் பாலோ ஆன் கொடுத்து பந்து வீச முடிவு செய்து இருக்கிறது. பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையை தாண்டி கம்பீர் தொடர்ந்து இரண்டு முறை பந்து வீசும் தைரிய முடிவை எடுத்திருக்கிறார்.
மேலும் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இடது கை மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சாதனை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : என் பயிற்சியில நியூசி கூட சொந்த மண்ணில் தோல்வி.. வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் – கம்பீர் வருத்தம்
இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களால் அதிக ஐந்து விக்கெட்டுகள்:
5 குல்தீப் யாதவ் (15 டெஸ்ட்)
5 ஜானி வார்டில் (28)
4 பால் ஆடம்ஸ் (45)






