என் பயிற்சியில நியூசி கூட சொந்த மண்ணில் தோல்வி.. வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் – கம்பீர் வருத்தம்

0
43
Gambhir

தன்னுடைய பயிற்சியில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றது குறித்து கம்பீர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அதிர்ச்சி அளிக்கும் வகையில் முழுமையாக தோற்றது. கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே படுதோல்வி வந்தது.

- Advertisement -

பறிபோன வாய்ப்பு

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று இருந்தால், அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்றாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளையும் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்றது. இது கம்பீரின் டெஸ்ட் பயிற்சி அணுகுமுறையை கேள்விக்கு உள்ளாக்கியது. மேலும் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பும் பறிபோனது.

- Advertisement -

எப்போதும் மறக்க மாட்டேன்

இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் வருத்தத்துடன் கூறும் பொழுது ” நான் மிக நேர்மையாக என்னுடைய மனதில் இருந்து பேசினால் இந்த தோல்வியை என்னால் எப்பொழுதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். மேலும் நான் இந்த தோல்வியை எப்பொழுதும் மறக்கவும் கூடாது”

இதையும் படிங்க : நான் கில்லை கேப்டன் ஆக்கி கடலில் தள்ளி விட்டேன்.. அப்ப இதைத்தான் சொன்னேன் – கம்பீர் பேச்சு

“நான் இதை என்னுடைய அணி வீரர்களிடமும் கூறி இருக்கிறேன். எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டியது அவசியம் தான். ஆனால் கடந்த காலத்தில் சில விஷயங்களை மறக்காமல் இருப்பதும் முக்கியம். நாங்கள் நியூசிலாந்தை வீழ்த்தி விடுவோம் என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் தோல்வி அடைந்தோம். இதை எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -