வெஸ்ட்இன்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான வலிமையான இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் !

0
864
Indian playing xi

இந்திய அணி இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வெஸ்ட் இன்டீஸ் அணியோடு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது!

இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை டிரினிடாட்டில் பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்குகிறது. இதற்கடுத்த இரண்டு போட்டிகள் வார்னர் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. 3, 4வது போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடக்கிறது!

- Advertisement -

வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகிய ஆறு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா மூவரும் டி20 தொடருக்குத் திரும்புகிறார்கள். மேலும் கே.எல்.ராகுல், ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள். உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் அணியில் தொடர்கிறார். ரோகித் சர்மா தலைமையில் 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்த 22 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து, குறைந்தபட்சம் முதல் மூன்று போட்டிகளுக்கான வலிமையான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனைத்தான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்!

ரோகித் சர்மா – கே.எல்.ராகுல்

- Advertisement -

கேப்டன் என்பதால் ரோகித் சர்மா அணியில் இடம்பெறுவதோடு துவக்க வீரராகக் களமிறங்குவார். கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு கொரோனோ தாக்கி சிகிச்சையில் இருந்தார். கொரோனா தொற்றிலிருந்து கே.எல்.ராகுல் மீண்டிருந்தால் அவர்தான் களமிறங்குவார். இல்லையென்றால் இஷான் கிஷான் களமிறங்குவார்!

தீபக் ஹூடா – ரிஷாப் பண்ட்

தீபக் ஹூடா தற்போது நல்ல பேட்டிங் பார்மில் இருப்பதாலும், ஆப்-ஸ்பின் பார்ட் டைமராகவும் பந்து வீச முடிவதால் நம்பர் 3ல் இடம்பெறுவது அவசியம். இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் அசத்திய ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பராகவும், நம்பர் 4லும் தொடர்வார்!

சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்ட்யா

இங்கிலாந்து டி20 தொடரின் மூன்றாவது கடைசி டி20 போட்டியில் அபார சதமடித்து, அசத்தல் பேட்டிங் பார்மில் இருக்கிறார். எனவே சூர்யகுமார் நம்பர் 5ல் இடம்பெறுவார். நம்பர் 6ல் பாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இருப்பார். இவரது பேட்டிங் பவுலிங் பார்மும் சிறப்பாய் இருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா – ஹர்சல் படேல்

நம்பர் 7ல் ஸ்பின் ஆல்-ரவுண்டராக காயத்திலிருந்து மீண்ட ஜடேஜா இடம்பெறுவது உறுதி. நம்பர் 8ல் மிடில் அன்ட் டெத் பாஸ்ட் பவுலரான ஹர்சல் படேல் இருப்பார். இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பைத் தருவார் என்பது குறிப்பிடத்தக்கது!

புவனேஷ்வர் குமார் – அர்ஷ்தீப் சிங்

மீண்டும் தனது சிறப்பான ஸ்விங் பாஸ்ட் பவுலிங்கில் பார்ம்க்கு திரும்பி இருக்கிறார் புவனேஷ்வர் குமார். இவர் நம்பர் 9ல் வருவது உறுதி. பும்ரா-ஷமி இல்லாததால், லெப்ட்-ஹேன்ட் ஸ்விங் பாஸ்ட் பவுலர் மற்றும் டெத் ஸ்பெசலிஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவது அணியை பலமாக்கும்.

யுஸ்வேந்திர சாஹல்

நம்பர் 11ல் இடம்பெறும் யுஸ்வேந்திர சாஹல் முதன்மை ஸ்பின்னராய் அணியில் இடம் பெறுவார். இரவீந்திர ஜடேஜா செகன்ட் ஸ்பின்னராய் இருப்பதால் யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவார்!