தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ போர்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகச் சாதனை ஒன்றைச் சமன் செய்திருக்கிறார்.
இன்று இரவு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசுவது என்று அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 9 பந்தில் 8 ரன்கள், எவின் லீவிஸ் 19 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் ஷாய் ஹோப் 57 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். ஒருமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேசி கார்தி சதம் அடித்து 109 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்.
இதைத் தொடர்ந்து கடைசி கட்டத்தில் வந்த வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ போர்ட் அபாரமாக விளையாடி 16 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் வெறும் 19 பந்துகளை மட்டும் சந்தித்து2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் மேத்யூ போர்ட் 16 பந்துகளில் சதம் அடித்ததில் மூலம், ஏபி டிவில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 16 பந்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்து உலகச் சாதனை படைத்திருந்ததை சமம் செய்திருக்கிறார். ஏபி.டிவில்லியர்ஸ் இந்த சாதனையை 2015 ஆம் ஆண்டு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் யார்?.. தன் முடிவை மாற்றி சூசகமாக தெரிவித்த கம்பீர்.. சிறப்பு பேட்டி
ஏபி டிவில்லியர்ஸ் – 16 பந்துகள்
மேத்யூ போர்ட் – 16 பந்துகள்
சனத் ஜெயசூர்யா – 17 பந்துகள்
எம் பெரேரா – 17 பந்துகள்
மார்ட்டின் கப்தில் – 17 பந்துகள்
லியாம் லிவிங்ஸ்டன் – 17 பந்துகள்