அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் யார்?.. தன் முடிவை மாற்றி சூசகமாக தெரிவித்த கம்பீர்.. சிறப்பு பேட்டி

0
418
Gambhir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்பது குறித்து சூசகமாகப் பதிலளித்திருக்கிறார்.

தற்போது இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட கால கேப்டனா அல்லது இடைக்கால கேப்டனா? என்கின்ற குழப்பமும் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

கம்பீர் கொள்கை

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் மூன்று வடிவங்களிலும் விளையாட கூடியவராக இருக்க வேண்டும் என்றும், மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டதும் அவர் இதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது தற்போது மூன்று வடிவ இந்திய அணிக்கும் ஒரே கற்பனை கொண்டு வருவது மிகவும் கடினமானது என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த விஷயம் இனி அரிதானது

இது குறித்து பேசி இருக்கும் கவுதம் கம்பீர் கூறும் பொழுது “மூன்று வடிவ அணிக்கும் ஒரே கேப்டன் இருக்கும் பொழுது அவருடன் இணைந்து வேலை செய்வது பயிற்சியாளராக எளிமையான விஷயமாக இருக்கும். ஆனால் தற்போது 12 மாதங்களும் ஒரு வீரர் 3 வடிவத்திலும் விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. எனவே இனிவரும் காலங்களில் மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டன் இருக்க முடியாது. அப்படி நடந்தால் அது அரிதானதாகவே இருக்கும்”

இதையும் படிங்க : 148 வருடம்.. 8 சதங்கள்.. இங்கிலாந்து ஒல்லி போப் படைத்த ஆச்சரிய சாதனை.. ஒரே ஒரு டெஸ்டில் சுவாரசியம்

“ஒரு வீரர் பத்து மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார். அவர் இந்திய கேப்டனாக இருக்கிறார் என்றால் நிச்சயம் ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு மாதங்கள் ஏதாவது ஒரு அணியை கேப்டனாக வழி நடத்துவார். இப்படி இருக்கும் பொழுது வருடம் முழுவதும் வெவ்வேறு வகையில் கேப்டனாக பணிபுரிவது அழுத்தத்தை கொடுக்கக் கூடியது. எனவே இரண்டாவதாக ஒருவர் இதை பகிர்ந்து கொள்வது நல்லது” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் அணிக்கு புதியவரான கில்லை கேப்டனாக கொண்டு வர முடிவில் இருப்பதாக சூசகமாகத் கூறியிருப்பதாக தெரிகிறது!

- Advertisement -