கோலி பற்றி ஆஸி லெஜன்ட் கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் பதிலடி!

0
5010
Virat

இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் ஆசியக்கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்த காரணத்தால், இந்தத் தொடர் இலங்கையிலும் சேர்த்து நடத்தப்படுகிறது!

செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கும் ஆசியக் கோப்பை தொடர் முடிந்து அடுத்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களும் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர்களாக இருக்கின்றன. மேலும் விராட் கோலி தன்னை வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான கட்டாயத்தில் இருக்கிறார். ஏனென்றால் இந்த முறை இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி சாதிக்க வேண்டும் என்றால் விராட் கோலி பேட்டிங்கில் பழையபடி திரும்பிப் வர வேண்டும்.

இப்படியான காரணங்களால் இந்த இரு தொடர்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடு மீதும் திரும்பி இருக்கிறது. அவரும் எதிர்வரும் போட்டிகளை எதிர் கொள்வதற்காக சிறப்பான பயிற்சி முறைகளை செய்து பேட்டிங்கை மாற்றி அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விராட் கோலி மற்றும் பாபர் ஆசம் இருவரையும் ஒப்பிட்டு பேசி இருந்த ஆஸ்திரேலிய லெஜண்ட் டாம் மூடி ” ஆசியக் கோப்பை தொடரில் பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி பெரிதாக செய்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை!” என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

தற்போது இவரது கருத்துக்கு நேர் எதிராக பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் அம்ப்ரோஸ் “அவர் இன்னும் ஒரு சிறந்த வீரர் மற்றும் தரமான பேட்ஸ்மேன். ஒவ்வொரு சிறந்த பேட்ஸ்மேன்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ரன்கள் எடுக்க சிரமப்பட்டு இருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இதை சந்திக்காத எந்த ஒரு பேட்ஸ்மேனையும் நான் பார்த்தது கிடையாது. விராட் கோலி ஒரு சிறப்பு வீரர். அவருக்கான நேரம் வந்தது. அவர் அந்த இடத்தில் கொஞ்சம் போராடினார். தற்பொழுது பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். மிகவும் சரளமாக இருக்கிறார். பழைய விராட் கோலியாகத் தெரிகிறார். அவர் இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டுக்காக சிறப்பாக செயல்பட முடியும்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை நான் எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளும் ஒரு புள்ளியில் தங்களை நிரூபிக்க விரும்புவதால், இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் தரமான ஒன்றாக இருக்கும். எனவே இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்க எல்லோருமே விரும்புகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!