கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரையன் லாரா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் வாரத்திற்கு மூன்று முறையாவது கார்ல் ஹூப்பரை அழ வைப்பார் என்று கூறியிருந்தார். தற்போது இதில் சம்பந்தப்பட்ட இருவருமே லாரா தவறான தகவல்களை கூறி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பிரையன் லாரா தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில் விளையாடிய பொழுது, அவர் மிகவும் அதிகாரம் கொண்டவராகவும் ஆளுமை செலுத்துபவராகவும் இருந்ததாகவும், அவர் பேசுவதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால் மனம் உடைந்து போவோம் என்றும், ஆனால் தான் எப்பொழுதும் மனரீதியாக வலிமையாக இருந்ததால் அதனால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் கார்ல் ஹூப்பர் மன வலிமை கொண்டவர் இல்லை, எனவே அவர் சீக்கிரத்தில் ரிச்சர்ட்சை விட்டு நகர்ந்து விட்டார் என்றும் கூறியிருந்தார். தற்பொழுது திவ்வியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கார்ல் ஹூப்பர் இருவரும் பிரைன் லாராவின் இந்த கருத்துக்கள் மிகவும் தப்பானவை என்றும், இதனால் தாங்கள் மனம் கஷ்டப்படுவதாகவும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரின் சார்பிலும் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டு அறிக்கையில் “பிரையன் லாரா முன்வைத்த குற்றச்சாட்டுகள் இருவரின் உறவில் இருந்த எதார்த்தத்தை சீர்குலைப்பதோடு, இருவரின் கேரக்டர்களுக்கும் தீங்கு விளைவு பிறப்பாக இருக்கிறது. அவருடைய புத்தகத்தில் தங்களைப் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் மனதிற்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
விவியன் ரிச்சர்ட்ஸ் கார்ல் ஹூப்பரின் முதல் கேப்டன் என்ற முறையில் ஒருமுறை கூட அவரது மனம் சங்கட்டப்படும்படி நடந்து கொண்டது கிடையாது. மாறாக அவர் எப்பொழுதும் ஊக்கமளிக்கும் வழிகாட்டியாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு அவர் அசைக்க முடியாத ஆதரவை கொடுத்தார். அவர்களது 40 ஆண்டுகால உறவு பரஸ்பரம் மரியாதையின் அடிப்படையில் அமைந்தது.
லாராவின் புத்தகத்தில் அவர்களுடைய தொடர்புகளை தவறாகச் சித்தரிப்பது உண்மையில் பெரியஅவமானமாக இருக்கிறது. மேலும் இருவருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மனத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : 12 பந்து 33 ரன்.. பொல்லார்ட் மேஜிக்கால் தகுதி.. ப்ளே ஆஃப்பில் வின்டேஜ் சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதல்.. எம்எல்சி 2024
லாரா அவர்கள் தனது புத்தகத்தில் இவர்களைப் பற்றி கூறிய கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் ஏற்பட்ட மன துயரங்களுக்கு லாரா வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கூறுகிறோம். பொதுவாகப் பேசப்படும் பேச்சுகளின் நேர்மை அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் நேர்மையாக அமைய வேண்டும் என்பது முக்கியம்” என்று கூறப்பட்டிருக்கிறது.