தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனை வெளியிட்டது.. இளம் வீரர் அறிமுகம்.. நட்சத்திர வீரர் வருகை

0
9
WI

தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இன்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் இன்று துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்கூட்டியே வெஸ்ட் இண்டீஸ் அறிவித்திருக்கிறது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் நியூசிலாந்து அணி இடம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இதை வெல்வதன் மூலமாக முதல் மூன்று இடங்களில் இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் போட்டியிட முடியும்.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்பாக இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொத்தமாக தோற்று நாடு திரும்பியது. எனது வெஸ்ட் இண்டீஸ் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கான முயற்சியில் இல்லை.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை வலுப்படுத்தும் விதமாக நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. முன்பிருந்ததை விட தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் ஓரளவுக்கு நல்ல முறையில் விளையாடுகிறது. எனவே உள்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று ரசிகர்களை மீண்டும் மைதானத்திற்கு அழைத்து வர முயற்சி செய்யும்.

- Advertisement -

இன்று துவங்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலது கை இளம் பேட்ஸ்மேன் கேசி கார்டி அறிமுகம் ஆகிறார். மேலும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கெமார் ரோச் அணிக்கு திரும்பியிருக்கிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையில் விளையாடுகின்ற காரணத்தினால் குடகேஷ் மோடி மற்றும் ஜெர்மன் வாரிகன் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். ஜேசன் ஹோல்டர் உடன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுகிறார்கள்.

இதையும் படிங்க : ரோகித் ரூட் யாரா வேணா இருக்கட்டும்.. இந்த ஒரு விஷயத்தால விராட் கோலிதான் பெஸ்ட் – ரவி சாஸ்திரி பாராட்டு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் :

கிரேக் பிராத்வைட், அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜோசுவா டா சில்வா (வி. கீ), கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், மிகைல் லூயிஸ், குடகேஷ் மோட்டி, கெமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜோமல் வாரிகன்.

- Advertisement -