இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் அரிய வீரர்களின் இந்தியாவின் விராட் கோலியும் ஒருவர். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல நவீன கிரிக்கெட் காலத்தில் விராட் கோலிக்கும் அப்படியான சிறப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலிதான் மற்ற எல்லோரையும் விட சிறந்த வீரராக இருக்கிறார் என ரவி சாஸ்திரி பாராட்டி இருக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் பேட்டிங் மூலம் பெரிய இடத்தை பிடித்த சச்சின் டெண்டுல்கர் போல விராட் கோலி இயல்பிலேயே கிரிக்கெட் பேட்டிங் திறன் பெற்றவர் கிடையாது. மேலும் அவரிடம் நவீன கிரிக்கெட் ஷாட் கிடையாது. ஆனால் அதி தீவிர பயிற்சியின் மூலமாக, கிரிக்கெட்டில் இருக்கும் வழக்கமான ஷாட்கள் மூலமாகவே உலகின் தனிச்சிறப்பு மிக்க வீரராக விராட் கோலி உருவெடுத்தது ஒரு மிகப்பெரிய அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் கேப்டனாக விராட் கோலியின் பங்கு மிகப் பெரியது. வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியை வெல்லம் மட்டும் கிடையாது டெஸ்ட் தொடரையும் இந்திய அணியால் வெல்ல முடியும் என்று காட்டிய கேப்டனாக அவர் இருக்கிறார். மேலும் எல்லா நேரத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டை வெற்றியை நோக்கி மட்டுமே விளையாட வேண்டும் என்கின்ற நோக்கத்தை அறிமுகப்படுத்திய இந்திய கேப்டனாகவும் இருக்கிறார்.
விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியதில் அவருடன் தலைமை பேச்சாளராக இணைந்து பணியாற்றிய ரவி சாஸ்திரம் மிகப்பெரிய பங்கு உண்டு. பும்ராவை உள்ளே கொண்டு வந்தது முதல், கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்றது வரை பயிற்சியாளராக அவர் நிறைய சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து கூறும்பொழுது “வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடிய வீரர்களை உங்களால் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஆனால் எந்த வீரனாவது விளையாட்டில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருக்க முடியும் என்றால், இது அவரிடம் இருக்கும் பல வகையான திறன்களையும், மேலும் சூழ்நிலைக்கு தகுந்தது போல் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறமையையும் காட்டுவதாக இருக்கிறது. பலரால் இதைச் செய்ய முடியாது. ஆனால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இதைச் செய்து காட்டினார். தான் ஏன் வித்தியாசமானவர்? என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய அணியை நடத்தியது நான் கிடையாது அவர்கள்தான்.. ஈகோவுடன் வீரர்கள் இருந்தார்களா? – ராகுல் டிராவிட் விளக்கம்
அவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்தவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த தசாப்தத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்திய வீரர் யார் என்று பார்த்தால் விராட் கோலி மட்டும்தான் இருக்கிறார். ஸ்மித் ஜோரூத் மற்றும் ரோஹித் சர்மா என நீங்கள் யாரை எடுத்து பார்த்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் மட்டுமே சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி மட்டும் தான் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்தவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






