செலக்டர்ஸ் என்னை நம்பல.. அப்படிப்பட்ட ஆளுங்களதான் நம்பறாங்க.. ஏமாற்றமா இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

0
101
Smith

தற்போதைய உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நான்கு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவரை நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யவில்லை. தற்போது அவர் இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆண்டு விற்கப்படவில்லை. மேலும் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு ஸ்மித் மிகச் சரியான பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என ஆரம்பத்தில் பேசப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க டி20 லீக்கில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்காக மிகச் சிறப்பான முறையில் துவக்க வீரராக ஸ்மித் விளையாடி இருந்தார். தன்னைத் தேர்வு செய்யாத செலெக்டர்களுக்கு மறைமுகமான பதிலடியாக அது இருந்தது.

மேலும் டேவிட் வார்னர் இல்லாத நிலையில் துவக்க ஆட்டக்காரராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் துவக்க வீரராக வருவாரா? என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது இது குறித்து அவர் மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்மித் கூறும் பொழுது “இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் தொடக்க ஆட்டக்காரராக வருவேனா என்பதை பொறுப்பாளர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் இந்த விஷயம் குறித்து எனக்கு எந்த வித குழப்பமும் கிடையாது. ஆனால் புதிய பந்தில் விளையாடும் பொழுது சில சவாலான சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுக்க விரும்புகிறேன்.

சர்வதேச டி20 கிரிக்கெட் பற்றிய விஷயங்கள் குறித்து என்னால் சொல்ல முடியாது, நீங்கள் தேர்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும். அதே டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா அணியில் நான் இடம்பெறாததில் ஏமாற்றமடைந்தேன். அவர்கள் எல்லா பெரிய ஹிட்டர்களையும் நம்புகிறார்கள்.

இதையும் படிங்க : கம்பீரை நினச்சா ஆச்சரியமா இருக்கு.. ஆஸி ஞாபகம் இல்லையா.. இந்த 2 வீரர்கள் ஏன் இல்ல – பாக் பசித் அலி வியப்பு

நான் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். எனவே நான் என்னுடைய பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்வேன். எனவே தொடர்ந்து நான் ரன்கள் குவித்து கொண்டே இருக்க வேண்டும். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -