450 ரன்.. 9 விக்கெட்.. க்ரீவ்ஸ் அபார ஆட்டம்.. டிக்ளர் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி..இக்கட்டான நிலையில் பங்களாதேஷ்

0
212

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து சவாலான இலக்கை வங்கதேச அணிக்கு டிக்ளர் செய்துள்ளது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்

தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதற்குப் பிறகு இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. மிக்கல் லூயிஸ் 97 ரன்களும், அத்தான்சே 90 ரன்களும் குவித்து வெளியேறிய நிலையில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜஸ்டின் கிரீவ்ஸ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவரோடு கெமார் ரோச் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்தக் கூட்டணி எட்டாவது விக்கட்டுக்கு 289 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரோச் 144 பந்துகளில் இரண்டு பௌண்டரியோடு 47 ரன்கள் குவித்த நிலையில் ஹாசன் முகமது பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு சீல்ஸ் 18 ரன்களில் வெளியேற 206 பந்துகளை எதிர்கொண்ட க்ரீவ்ஸ் நான்கு பௌண்டரிகளுடன் 115 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்கள் உயர முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

டிக்ளர் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 144.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் முதல் இன்னிங்ஸிலையே வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளர் செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணித் தரப்பில் ஹாசன் முகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க:இந்தியா ஆஸி டெஸ்ட்.. முதல் நாள் 17 விக்கெட்.. ஒரே இரவில் நிறம் மாறிய பிட்ச்.. நடந்தது என்ன.?

அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் வங்கதேச அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முகமது ஹாசன் ஐந்து ரன்னிலும், ஜாகிர் ஹாசன் 15 ரன்னிலும் வெளியேறி இருக்கிறார்கள். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணித்தரப்பில் சீல்ஸ் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -