இந்தியா ஆஸி டெஸ்ட்.. முதல் நாள் 17 விக்கெட்.. ஒரே இரவில் நிறம் மாறிய பிட்ச்.. நடந்தது என்ன.?

0
606

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் முதல் நாளில் 17 விக்கெட் விழுந்த நிலையில் இரண்டாவது நாளில் பெர்த் மைதானத்தில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் இந்திய அணி விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆடுகளம் அப்போது வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இந்த சூழ்நிலையில் தனது இரண்டாவது இன்னும் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்தது.

மொத்தமாக ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணி எஞ்சிய மூன்று விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது பேட்டிங் துவங்கிய இந்திய அணி 172 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட் ஏதும் இழக்காமல் இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆடுகளத்தில் ஏற்பட்ட மாற்றம்

இதற்கான காரணம் தற்போது வெளிவந்திருக்கும் நிலையில் முதல் நாளில் ஆடுகளம் போதிய சூரிய வெளிச்சம் இன்றி இருந்தது. மேலும் புதிய பந்து பயன்படுத்தப்பட்டதால் அதன் தையல் பகுதியை பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் முதல் நாள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஒத்துழைத்த ஆடுகளம் இரண்டாவது நாளில் போதிய சூரிய வெளிச்சத்தால் ஆடுகளம் நன்றாக வறண்டு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க:நாளை ஐபிஎல் மெகா ஏலம்.. அடிக்க போகும் ஜாக்பாட்.. டி20 கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் நிகழ்த்திய ஸ்பெஷல் சாதனை

மேலும் பந்தின் தையல் பகுதியும் தேய்ந்து எளிதாக பேட்டுக்கு வருவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. மேலும் பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தால் ஆடுகளம் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஆதரவாக மைதான பராமரிப்பாளர்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் சூரிய வெளிச்சத்தால் ஆடுகளம் காய்ந்து விட்டதாலேயே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் மெக் டொனால்டு கூறியிருக்கிறார்.

- Advertisement -