என்கிட்ட வேலைக்காகாது.. சொந்த டீம்ல அல்ஜாரி ஜோசப் பண்ணத ஏத்துக்க மாட்டேன் – கோச் டேரன் சமி கோபம்

0
432
Sammy

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது கேப்டன் ஷாய் ஹோப்பிடம் களத்தில் சண்டையிட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்பின் நடவடிக்கையை பயிற்சியாளர் டேரன் சமி கண்டித்து பேசி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

- Advertisement -

அல்ஜாரி ஜோசப் கோபம்

நேற்றைய போட்டியின் போது ஐந்தாவது ஓவரை வீசிய அல்ஜாரி ஜோசப் கேப்டன் ஷாய் ஹோப் அமைத்திருந்த ஃபீல்டிங் செட்டப்பில் மகிழ்ச்சி அடையவில்லை. அவர் அந்த ஓவரின் போது தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கைகளை ஆட்டி ஃபீல்டிங் பொசிஷன்களை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டான் காக்ஸ் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். பிறகு அந்த ஓவரை முழுவதுமாக வீசி முடித்ததும் அவர் கோபமாக களத்தை விட்டு வெளியேறி ஓய்வறைக்கு சென்று விட்டார். பிறகு உடனே ஓய்வறையில் இருந்து வந்து வெளியே அமர்ந்து கொண்டார். இதன் காரணமாக அந்த ஒரு ஓவர் முழுக்க வெஸ்ட் இண்டீஸ் 10 வீரர்களை மட்டுமே வைத்து விளையாடியது.

- Advertisement -

பயிற்சியாளர் டேரன் சமி கோபம்

பிறகு அவர் மீண்டும் ஒரு ஓவரில் உள்ளே வந்தார். அடுத்து அவர் பன்னிரண்டாவது ஓவரை வீசினார். மேலும் களத்தில் மிஸ் ஃபீல்டிங் செய்தும் ஓவர் த்ரோ விட்டும் ரன்களை கசிய விட்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் ஒரு முறை கேப்டன் அனுமதியுடன் களத்தை விட்டு வெளியேறி விட்டார். இருந்தபோதிலும் இந்த குறிப்பிட்ட போட்டியில் அவர் பத்து ஓவர்கள் முழுமையாக பந்துவீசி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: ஐபிஎல்-ல் எங்க அம்பயர்ஸ் சம்பாதிக்க ஆசைப்படறாங்க.. அதான் இஷானை தண்டிக்கல – வார்னர் மனைவி விமர்சனம்

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி கூறும் பொழுது “நான் இருக்கும் கிரிக்கெட் களத்தில் இப்படியான ஒரு நடத்தையை என்னால் எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாக நல்ல நட்புறவில் இருப்போம். ஆனால் அதற்காக நாங்கள் உருவாக்கும் ஒரு கலாச்சாரத்தின் பொருட்டு இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் இதை விட்டு விட மாட்டோம். இதுகுறித்து நாங்கள் நிச்சயம் பேசுவோம்” என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -