ஆஸ்திரேலியா நடுவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கு பெற விரும்புவதால் இஷான் கிஷானை பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டிக்கவில்லை என டேவிட் வார்னர் மனைவி விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்பொழுது ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது.
இஷான் கிஷான் விவகாரம்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிகள் டிக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இடம்பெற்ற இஷான் கிஷான் பந்தைக் கீறியதின் காரணமாக கள நடுவர் பந்தை மாற்றும் முடிவுக்கு சென்றார். அப்பொழுது இஷான் கிஷான் பந்தை மாற்றக்கூடாது என விவாதம் செய்தார். இதை கள நடுவர் ஏற்காமல் பந்தை மாற்றினார்.
அப்பொழுது பந்தை மாற்றுவது முட்டாள்தனமான காரியம் என கடுமையான வார்த்தையை பயன்படுத்தி இஷான் கிஷான் விமர்சனம் செய்தார். இப்படியான விமர்சனம் தண்டனைக்குரியது என கள நடுவர் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார். ஆனால் பந்தை சேதப்படுத்தியதற்கோ அல்லது தவறான வார்த்தையை பயன்படுத்தியதற்கோ அவர் தண்டிக்கப்படவில்லை. மேலும் பந்து சேதப்படுத்தப்படவில்லை என்று இன்னும் எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை.
டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவி விமர்சனம்
இது குறித்து டேவிட் வார்னர் கூறியிருந்தபொழுது நிச்சயமாக என்ன நடந்தது என்பது குறித்து கள நடுவர்கள் வெளியில் வந்து பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போது கோடைகாலத்தில் இந்தியா வந்து ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அப்படியே அமுக்கி மூடிவிட்டது என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க : இந்திய தொடர்ல அவருக்கு மட்டும் தான் குறி வச்சு இருக்கோம்.. அசந்தா முடிச்சுடுவாரு – பாட் கம்மின்ஸ் பேட்டி
இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள டேவிட் வார்னர் மனைவி கூறும் பொழுது “இதுதான் கிரிக்கெட்டில் இந்தியாவின் சக்தியாகும். அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை இது காட்டுகிறது. எங்களுடைய நடுவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கு பெற விரும்புவதால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இஷான் கிஷானை தண்டிக்கவில்லை” என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார். டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தி ஒரு வருடம் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!