39 ரன்னில் ஆல் அவுட்.. 10 பேர் ஒற்றை இலக்கம்.. உகாண்டாவுக்கு எதிரா வெஸ்ட் இண்டீஸ் வெறித்தனம்.. மோசமான சாதனை

0
274
WI

நடப்பு டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உகாண்டா அணியை சொற்ப ரன்னில் சுருட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி உலக சாதனை வெற்றி பெற்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு புதிய அணியான உகாண்டாவுக்கு சோகம் நடந்திருக்கிறது.

இன்று நடைபெற்ற போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. உகாண்டா அணியின் பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இருந்து எந்த பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடிக்க முடியவில்லை.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 42 பந்தில் 44 ரன்கள், ரசல் 17 பந்தில் 30 ரன்கள், பூரன் மற்றும் ரூதர்போர்டு தலா 22 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. உகாண்டா தரப்பில் மசாபா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அந்த அணி ஒட்டு மொத்தமாக 39 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 10 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது ஆக வந்த ஜூமா மியாகி மட்டும் தாக்குப்பிடித்து 20 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான முறையில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பந்துவீச்சில் அகேல் ஹுசைன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். அல்ஜாரி ஜோசப் மூன்று ஓவர்களுக்கு ஆறு ரன் மட்டும் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 36 ரன்கள்.. ஹெட் வார்னர் அதிரடி.. ஆஸ்திரேலியா வெற்றி.. இங்கிலாந்து அணி வெளியேறுகிறதா?

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 39 ரன்கள் எடுத்து சுருண்டு இருந்தது. தற்பொழுது உகாண்டா அணி 39 ரன்களில் சுருண்டு இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடரில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாக மோசமான சாதனையில் பதிவாகி இருக்கிறது.

- Advertisement -