36 ரன்கள்.. ஹெட் வார்னர் அதிரடி.. ஆஸ்திரேலியா வெற்றி.. இங்கிலாந்து அணி வெளியேறுகிறதா?

0
267
Australia

இன்று நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி பவர் பிளேவில் முதல் ஐந்து ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 16 பந்தில் 2 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் 39 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் மிட்சல் மார்ஸ் 25 பந்தில் 35 ரன்கள், மேக்ஸ்வெல் 25 பந்தில் 28 ரன்கள், ஸ்டோய்னிஸ் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. ஜோர்டான் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டுக்கு ஏழு ஓவர்களில் 73 ரன்கள் வந்த நிலையில் பில் சால்ட் 23 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 28 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும் இதை பயன்படுத்தி அந்த அணியின் பேட்ஸ்மேன்களால் முன்னேற முடியவில்லை. மொயின் அலி 15 பந்தில் 25 ரன்கள், ஹாரி புரூக் 16 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கம்மின்ஸ் மற்றும் ஜாம்பா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: 12/4 சரிந்த தெ.ஆ.. 2 வருடம் காத்திருந்து பழிதீர்த்த டேவிட் மில்லர்.. நெதர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்து அணிக்கு முதல் ஆட்டம் ஸ்காட்லாந்துடன் மழையால் டிரா ஆனது. சிறிய அணிக்கு எதிரான போட்டி டிரா ஆகி, தற்பொழுது பெரிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி வந்திருப்பதால், முதல் சுற்று முடிவில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரே புள்ளியை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் ரன் ரேட் பெரிய அளவில் வேலை செய்யும். ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு அடுத்து ஏதாவது மழையால் போட்டி நடக்காமல் போய், ஸ்காட்லாந்து அணி சிறிய அணிகளை வென்றால் இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேற வேண்டியது வரும்.