30/5 சரிந்த வெஸ்ட் இண்டீஸ்.. தனியாளாக ஹீரோவான ரூதர்போர்டு.. நியூசிலாந்து பரிதாபமாக வெளியேறியது

0
406
WI

இன்று டி20 உலகக் கோப்பை சி பிரிவில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தலாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதே சமயத்தில் நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றோடு ஏறக்குறைய கிளம்பியும் விட்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருந்த அந்த அணிக்கு டாஸ் உதவி செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதனால் நியூசிலாந்து எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வரும் ஷெர்பான் ரூதர்போர்டு இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 39 பந்துகளில் இரண்டு பவுண்டரி ஆறு சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் அகேல் ஹுசைன் 15, ரசல் 14, ரோமாரியோ செப்பர்டு 13 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 23 பந்தில் 26 ரன், கிளன் பிலிப்ஸ் 33 பந்தில் 40 ரன், சான்ட்னர் 12 பந்தில் ஆட்டம் இழக்காமல் 21 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அல்ஜாரி ஜோசப் நான்கு விக்கெட் கைப்பற்றினார். 13 ஆண்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

நியூசிலாந்து அணி குழுவில் உள்ள வலிமையான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக முதல் இரண்டு ஆட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. மேலும் இந்த அணியின் ரன் ரேட் மைனஸ் 2.425 என மோசமாக இருக்கிறது.

இதையும் படிங்க: புதிய விதி தேவையா.? இப்போ இந்தியாவை காப்பாத்துச்சு ஓகே.. நாளைக்கு அதுவே பிரச்சனையா மாறுனா? ஐசிசியை விளாசும் ஹர்பஜன்

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் தனது முதல் இரண்டு ஆட்டத்தில் உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, ரன் ரேட் பிளஸ் 5.225 என பயங்கரமாக இருக்கிறது. எனவே நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான் அடுத்த இரண்டு போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட, நியூசிலாந்து வெளியேறி ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றுக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -