2வது டெஸ்டுக்கான அணியை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ்.. முக்கிய வீரர் அதிரடி நீக்கம் .. புதிய வீரருக்கு வாய்ப்பு!

0
1912
Indvswi2023

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங்கில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீச்சில் மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றி அஸ்வின் அசத்தினார்.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பந்துவீச்சில் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான கார்ன்வெல் உடல் நலக்குறைவால் வெளியேறி மீண்டும் வந்து விளையாடினார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு இரண்டாவது டெஸ்ட்க்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை தேர்வு செய்ததில் அதிரடியான சில மாற்றங்களை செய்ய முன் வந்திருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இடது கை பேட்ஸ்மேன் ரேமன் ரெய்ஃபரை அதிரடியாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு நீக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அவர் அணியில் தொடர்வார். ஏதாவது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர் தேவைப்படுவார் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவருக்கு பதிலாக கயானாவை சேர்ந்த இளம் வலது கை ஆப் ஸ்பின்னர் கெல்வின் சின்கிளேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 7 ஒரு நாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவர் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தேவையான அளவிற்கு நல்ல சராசரியை கொண்டு உள்ளார். பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிரான தொடரில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருந்தார்.

தற்பொழுது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படுவதால், மேலும் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான கார்ன்வெல் இரண்டாவது போட்டிக்கு கிடைப்பது கடினம் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழு இவரைக் கொண்டு வந்து, புதிய முயற்சியை செய்து இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி.

கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச் , ஜோமல் வாரிக்கன்.