ஆஸி தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் நீக்கம்.. டி20 உலககோப்பைக்கு தயார் நிலை

0
3651

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடர் ஜனவரி 17 முதல் ஜனவரி 29 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஏற்கனவே விளையாடி வருகின்றனர்.

அதன்பின் பிப்.2 முதல் பிப்.6 வரை ஒருநாள் தொடரும், பிப்.9 முதல் பிப்.13 வரை டி20 தொடரும் நடத்தப்படவுள்ளது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன் கோப்பையை வென்ற டேரன் சமி பயிற்சி அளித்து வருகிறார்.

- Advertisement -

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நட்சத்திர அதிரடி வீரரான ஷிம்ரான் ஹெட்மயர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மீண்டும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

அதேபோல் ஜேசன் ஹோல்டர் மற்றும் கைல் மேயர்ஸ் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பமில்லை என்று கூறிவிட்டு, லீக் தொடரில் இருவரும் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் பிரண்டென் கிங் மற்றும் ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்ட் இருவரும் லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டி20 தொடரிலேயே அனுபவ வீரரான ஆண்ட்ரே ரஸஸ் வெஸ்ட் அணியில் சில ஆண்டுகளுக்கு பின் சேர்க்கப்பட்டார். தற்போது ஹோல்டர் மற்றும் மேயர்ஸ் உள்ளிட்டோரும் திரும்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டெட்டி பிஷப், டெவின் இம்லாச், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஹாட் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பலம் வாய்ந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் உருவாகியுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான கம்பேக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு தலைவர் ஹேய்ன்ஸ் கூறும் போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வென்றதை போல் ஆஸ்திரேலியா மண்ணிலும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்க்கிறோம். சில வீரர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் டி20 தொடரில், சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறோம். ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதே இலக்காக உள்ளதாக தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மன் பவல், ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், பிரண்டென் கிங், கைல் மேயர்ஸ், மோட்டீ, அகீல் ஹொசைன், பூரன், ரஸல், ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒஷான் தாமஸ்.