3 வருஷத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலிய அணியில் ஒரே குளறுபடி, அதுக்கு காரணம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தான் – மார்னஸ் லபுச்சானே பேட்டி!

0
502

‘மூன்று வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியில் இப்படி ஒரு குளறுபடி நடந்தது. அதன் பிறகு தான் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா இன்னும் பலமிக்கதாக மாறியது.’ என்று நிபந்திய பேட்டிகள் கூறியுள்ளார் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஜானே.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வருகிற ஜூன் மாதம் 7 முதல் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுகின்றன. போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த பைனல் குறித்து பல்வேறு கருத்துக்களும் கணிப்புகளும் நிலவி வருகின்றன. ஏற்கனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கடந்த முறை விளையாடியுள்ளது. துரதிஷ்டவசமாக நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இம்முறை அந்த அனுபவத்தை கொண்டு வெற்றிபெற முனைப்புடன் இருக்கிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இங்கிலாந்தின் கண்டிஷன் நன்கு உணர்ந்தவர்கள். இங்கு பலமுறை ஆசஸ் தொடர்களை விளையாடி, வென்றிருக்கின்றனர். பைனலில் பரபரப்பான ஆட்டம் நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து பேசிய ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஜானே, கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியில் நிலவி வந்த குழப்பங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது:

- Advertisement -

“இப்போது பலம் மிக்க ஆஸ்திரேலியா அணியை பலரும் பார்க்கிறோம். ஆனால் 2019 ஆம் ஆண்டு அணியில் சில குழப்பங்கள் நிலவியது. தடைக்காலம் முடிந்து உள்ளே வந்த ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் எந்த இடத்தில் விளையாட வைக்கப்படுவார்கள் என்கிற குழப்பங்கள் இருந்தது. ஏனெனில் அப்போது ஆஸ்திரேலியா அணி நன்றாக செட்டாகி இருந்தது.

அதன் பிறகு இவர்கள் உள்ளே வந்து குழப்பங்கள் நிலவினாலும், அணியில் பயிற்சிகள் தீவிரமானது மற்றும் வீரர்கள் மத்தியில் இருக்கும் போட்டி மனப்பான்மை இன்னும் ஆரோக்கியமாகவும் ஆக்ரோஷமாகவும் மாறியது. இதனால் ஒவ்வொரு வீரர்களும் துடிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பார்த்தனர்.

குறிப்பாக, பந்துவீச்சாளர்களும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயத்தில் மூன்று போட்டிகளில் மூன்று விதமான பந்துவீச்சு அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணி கையாண்டது. வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்தனர். இவை இப்போது பலமிக்க அணியாக இருப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

இப்போது தெளிவான பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்ட கலவையான அணியாக ஆஸ்திரேலிய அணி மாறுவதற்கு அந்த குளறுபடி காரணமாகவும் இருந்தது.” என்றார் லபுஜானே.