“நல்லா தெரியும்.. ரோகித் சர்மாவின் முதல் தேர்வு இந்த 26 வயசு பையன்தான்” – ரெய்னா பேட்டி!

0
213
Rohit

இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.

தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இருவருமே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் திரும்புவார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் நிச்சயம் இருப்பார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரில் இருவர் இடம் பெறுவார்கள்.

பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உறுதியாக இருப்பார்கள். இந்திய தேர்வு குழுவுக்கு இந்தத் தேர்வுகளில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

ஆனால் இரண்டு விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்வதில் நிறைய தடுமாற்றமும் குழப்பமும் இருக்கும். தற்பொழுது இந்திய டி20 அணியின் இடம்பெற்று இருக்கும் ஜிதேஷ், சர்மா சஞ்சு சாம்சன் மற்றும் வெளியில் இருக்கும் இஷான் கிஷான் கேஎல்.ராகுல் ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்கள் இல்லாமல் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக இருந்து சாலை விபத்தில் சிக்கி தற்பொழுது குணமடைந்து வரும் ரிசப் பண்ட் இருக்கிறார். அவர் முழு குணமடைந்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான போட்டியில் அவரை விளக்க முடியாது.

இதுகுறித்து பேசி உள்ள சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “சஞ்சு சாம்சன் ஒரு முக்கிய ஆயுதமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அவரால் எங்கும் பேட்டிங் செய்ய முடியும். மேலும் ஜிதேஷ் சர்மா இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவின் முதல் தேர்வாக ரிஷப் பண்ட் இருப்பார். அவர் அடுத்த இரண்டு மாதங்களில் ஐபிஎல் தொடரில் என்ன செய்கிறார், எப்படி கம்பேக் கொடுக்கிறார் என்பதை பொறுத்து எல்லாம் அமையும்.

இதற்கடுத்து இஷான் கிஷான் இன்னொரு விருப்பமாக இருப்பார். ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடுகிறார் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் சஞ்சு சாம்சன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்துகிறார். அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்!