நாளை முதல் டி20.. கவலை தரும் மழை வாய்ப்பு.. தோனியின் ராசியான மைதானம்.. புள்ளி விபரங்கள் பட்டியல்

0
227
ICT

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் மழை பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக போட்டி கைவிடப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட அந்த நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நாளை டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய நேரப்படி 8:30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

தோனியின் ராசியான டர்பன் மைதானம்

2007 ஐசிசி முதல் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அப்பொழுது இந்திய அணி பவுல்ட் அவுட்டு முறையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் யுவராஜ் சிங் அதே உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி இருந்தார்.

மேலும் இந்த மைதானத்தில் இந்திய அணி மொத்தம் ஐந்து டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதில் மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் பவுல்ட் அவுட்டில் வெற்றியும், ஒரு போட்டியில் முடிவில்லாமல் போயிருக்கின்றன. இந்த மைதானத்தில் தோல்வி அடையாத கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி இருக்கிறார்.

- Advertisement -

கவலை தரும் வானிலை அறிக்கை

இங்கு இந்திய தரப்பில் அதிக ரன் அடித்தவராகவும், அதிக சிக்சர் அடித்தவராகவும் யுவராஜ் சிங் இருக்கிறார். அதிக விக்கெட் கைப்பற்றியவர்களாக ஆர்பி.சிங் மற்றும் இர்பான் பதான் இருக்கிறார்கள். மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சேவாக் மற்றும் கம்பீர் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது அதிகபட்சமாக இருக்கிறது.

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் ஏலம்.. ஆர்சிபி இந்த 4 வீரர்கள வாங்குங்க.. கெத்தா கப் ஜெயிக்கலாம் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

நாளை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி முதல் மழை வருவதற்கான வாய்ப்புகள் 47 சதவீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் மழைக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. வானிலை அறிக்கையின் படி மழை வருவதாக இருந்தால், ஆட்டம் நாளை நடைபெறுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -