இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி எந்த நான்கு பந்துவீச்சாளர்களை வாங்குவது சிறப்பாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி.டிவில்லியர்ஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலம் வருகின்ற நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதியில் சவுதி அரேபியாவில் நடக்கிறது. மேலும் இதில் ஒட்டுமொத்தமாக 1547 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆர்சிபி தக்கவைப்பு வியூகம்
ஆர்சிபி அணி தற்பொழுது விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் அன் கேப்டு பிளேயர் யாஷ் தயால் என மூன்று வீரர்களை தகவல்கள். அந்த அணியின் கையில் தற்போது 80 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. இரண்டாவது அதிகபட்ச தொகையை வைத்திருக்கும் அணியாகவும் தற்போது ஆர்சிபி அணி இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் 16 வருடங்களாக ஏலத்தில் பெரிய அளவில் தவறு செய்த அணியாக ஆர்சிபி அணி இருந்து வந்திருக்கிறது. இந்த முறை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் ஆன்டி பிளவர் இருக்கின்ற காரணத்தினால், கையில் இருக்கும் பெரிய தொகையை வைத்து சிறந்த ஒரு அணியை ஆர்சிபி ஏலக்குழு உருவாகும் என்று ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்த நான்கு வீரர்களை தூக்குங்க
இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “நான் முன்னுரிமை கொடுக்கும் நான்கு வீரர்கள் யார் என்றால் சாகல், அஸ்வின், ரபாடா மற்றும் புவனேஸ்வர் குமார். இவர்களை வாங்கியது போல ஏலத்தில் மீதம் உள்ள பணத்தை வைத்து நாம் நமக்கான திட்டத்தை உருவாக்கலாம். ரபாடா கிடைக்காவிட்டால் ஷமியை கைப்பற்றலாம். அவரும் கிடைக்காவிட்டால் அர்ஸ்தீப்பை எப்படியும் வாங்கலாம்”
“கட்டாயம் கோப்பையை என்றே ஆக வேண்டும் என்கின்ற நெருக்கடியில் இருந்து வெளியில் வந்து விட வேண்டும். நாம் தற்போது என்ன செய்ய வேண்டும் என்றால், பெங்களூரு மைதானத்தில் அதற்கான திட்டங்களை புரிந்து கொண்டு, சரியாக பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்களை கொண்டு அணியை உருவாக்குவதைதான் செய்ய வேண்டும்”
இதையும் படிங்க : தம்பிங்களா விராட் ரோகித்.. ரூம்ல உட்கார்ந்து இருந்தா முடியாது.. போய் இத செய்யுங்க – கபில் தேவ் அறிவுரை
“தற்போது எங்களிடம் நல்ல விஷயம் என்னவென்றால் விராட் கோலி இன்னும் இருக்கிறார். நாங்கள் வீரர்களை தக்க வைப்பதற்கு அதிக பணத்தை செலவிடவில்லை. தற்போதைய எங்களிடம் நிறைய பணம் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாகலை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். அவரைப் போன்ற ஒருவரை முதலில் வெளியே விட்டு இருக்கவே கூடாது” என்று கூறியிருக்கிறார்.