இந்திய கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்.. மழையால் இந்திய அணிக்கு சிக்கல்.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்.?.. WTC பைனல் வாய்ப்பு விவரம்

இந்திய அணி நாளை மறுநாள் ஜனவரி 3ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான வானிலை அறிக்கை இந்திய அணியையும், ரசிகர்களையும் கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று, இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதே சமயத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி மைதானத்தின் பொதுவான புள்ளி விபரங்கள்

சிட்னி மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 370, இரண்டாவது மற்றும் மூன்றாவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 300, நான்காவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 270 என்று இருக்கிறது. இங்கு கடைசியாக நடைபெற்ற ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன.

மேலும் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெறும் என்பதால், பெரிய ரன் அடிப்பதற்கான பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை கூட ஆஸ்திரேலியா கொண்டு வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில்தான் வானிலை அறிக்கையும் அவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

- Advertisement -

சிட்னி டெஸ்ட் வானிலை அறிக்கை

இந்த போட்டி தொடங்கும் முதல் நாளில் வானம் மேகமூட்டத்துடனும் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பும் இருக்கிறது. அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் போட்டியின் நான்காவது நாளின் இரவில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அடுத்து ஐந்தாவது நாள் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐந்தாவது நாளில் 70 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாகவும், மேலும் வானிலையும் மழை பெய்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதாலும், இந்த போட்டியும் டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. விராட் கோலி இதை வேணும்னே செய்றாரு.. அதுக்கு காரணம் இதுதான் – ஆரோன் பின்ச் கருத்து

இதன் காரணத்தால் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும், இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறும் சூழலும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by