நாளை முதல் டெஸ்ட்.. 5 நாள் மழை வாய்ப்பு.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விவரங்கள்.. முழு தகவல்கள்

0
302
Virat

இந்தியா நியூசிலாந்து அணிகள் நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதிக் கொள்கின்றன. இதற்கான வானிலை அறிக்கை மற்றும் ஆடுகளம், மைதான புள்ளி விபரங்களை பார்க்கலாம்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினால், மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைவதற்கு இந்திய அணி பெரிய அளவில் கடினப்பட தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மழை வாய்ப்பு

இந்த போட்டியில் ஐந்து நாட்களிலுமே மழை குறுக்கீடு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவானிலை அறிக்கை கூறுகிறது. தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஒட்டி மிக அருகில் அமைந்திருக்கும் பெங்களூரில் இந்த பாதிப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொடுக்கப்படுகிறது. எனவே நாளைய போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமே இருக்கும் என்று நம்பப்படுகிறது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் குல்தீப் யாதவ் விளையாடலாம்.

- Advertisement -

மைதான புள்ளி விபரங்கள்

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 22 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 13 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. 27 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன.

மேலும் இந்தியா நியூசிலாந்து அணிகள் மூன்று முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதிய போட்டியில் மூன்று போட்டியிலும் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 24 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய அணி 9 போட்டிகளில் வென்று 6 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன.

இதையும் படிங்க : நாளை நியூசி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. சிறப்பு திட்டம்.. முக்கிய 1 மாற்றம்.. முழு அலசல்

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் பத்து முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் ஐந்து முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 354, 304, 206, 174 ரன்கள் நான்கு இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோர் இருக்கிறது. கடைசியாக இந்த மைதானத்தில் 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -