நாளை நியூசி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. சிறப்பு திட்டம்.. முக்கிய 1 மாற்றம்.. முழு அலசல்

0
248
Rohit

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பெரிய வெற்றிகள் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நியூசிலாந்துக்காக சிறப்பு திட்டமா?

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டு இந்திய அணி தொடரை சந்தித்தது. கடைசி நாளில் ஓரளவுக்கு மேல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் கிடைத்தது.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து இந்திய அணி சந்திக்க இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே அணியில் 16வதாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் யாஸ் தயால் நீக்கப்பட்டிருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

ஒரே ஒரு மாற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் களம் இறங்கி, மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை உண்டாக்கலாம். இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக முதலில் சிராஜ் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் சர்பராஸ் கானையும் இப்போது விளையாட வைக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பிரச்சனை அவங்க 3 பேர் இல்லை.. அந்த 27 பேர்தான்.. இதுல தப்பு பண்ணா பாகிஸ்தான் எப்படி ஜெயிக்கும் – நாசர் ஹுசைன் கருத்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல்.ராகுல் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பரித் பும்ரா, மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -