உலக கோப்பையை நாங்கதான் ஜெயிப்போம்.. ஆனால் இந்தியாதான் ஸ்ட்ராங் – வித்தியாசமாக குழப்பும் பாகிஸ்தான் வீரர்!

0
617
Ind vs Pak

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான தயாரிப்புகளில் பங்கேற்கும் 10 அணிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன!

உலகக் கோப்பைக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

எனவே இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் டி20 லீக்கில் பங்குபெற்று விளையாடினார். மேலும் தற்பொழுது இலங்கையில் வைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தான அணி விளையாடுகிறது.

நேற்று இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. 201 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி முதலில் விளையாடி சுருண்டது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணியை தனது அபாரமான வேகப்பந்து வீச்சு மூலமாக 59 ரண்களுக்கு சுருட்டி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பலம் அபாரமாக இருந்தது. மேலும் அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இல்லை. ஆனால் ஆப்கானிஸ்தான அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

- Advertisement -

நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு பற்றி பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்
“பாகிஸ்தானுக்கு இந்த உலகக் கோப்பையில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எங்களிடம் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதல் இருக்கிறது. ஆனால் அது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

பேட்டிங்க்கு வரும்போது இமாம் உல் ஹக், பகார் ஜமான் மற்றும் பாபர் ஆஸம் மிகவும் சிறப்பாக இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், சதாப்கான் மற்றும் முகமது நவாஸ் இவர்கள் எல்லோரும் தாமாக தேர்வாக கூடியவர்களாக இருக்கிறார்கள்.

எங்களுடைய பேட்டர்கள் பவர் பிளேவில் கொஞ்சம் மெதுவாக இருக்கிறார்கள். மேலும் கடைசிக்கட்ட ஓவர்களில் எங்களிடம் நல்ல பவர் ஹிட்டர்கள் இல்லை. பந்துவீச்சில் நாங்கள் பவர் பிளேவில் நன்றாக இருந்தாலும், 11வது 40வது ஓவர் வரை எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. எங்களுடைய ஸ்பின்னர்கள் சதாப் கானோ இல்லை முகமது நவாசோ விக்கெட் வீழ்த்தக் கூடியவர்களாக இல்லை.

மறுபுறம் இந்தியா மிடில் ஓவர்களில் மிகவும் வலிமையாக இருக்கிறது. ரோகித் சர்மாவும் விராட் கோலியும் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் எங்களது டாப் ஆர்டர் பேட்டர்களை விட சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட கூடியவர்கள். இதெல்லாம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!