“உலக கோப்பையை தக்க வைக்க நினைக்க மாட்டோம்!” – இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பரபரப்பு பேச்சு!

0
776
Buttler

தற்பொழுது நியூசிலாந்து அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. நியூசிலாந்து அணி தலா 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இந்த நிலையில் இதற்கு அடுத்து நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி ஒரு போட்டியை வென்றிருக்க இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளை வென்றிருந்தது. இந்த நிலையில் நேற்று தொடரை முடிவு செய்யும் நான்காவது போட்டி நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் மிகச் சிறப்பாக விளையாடி 114 பந்துகளில் 127 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 38.2 ஓவர்களில் 211 ரன்கள் அவுட் ஆகி, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தொடரை இழந்தது. மொயின் அலி சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றி, தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகச் சாம்பியன் ஆக இருந்து வருகிறது.

தொடரை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறும்பொழுது “நாங்கள் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக இருந்தோம். விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது. இதனால் எல்லோரும் கொஞ்சம் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று சொன்னார்கள். சுழற் பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்து வீசினார்கள். அவர்கள் பேட் மற்றும் பந்தில் மிகவும் சிறந்த வீரர்கள். நாங்கள் ஒரு அணியாக மிக நன்றாக இருக்கிறோம். நான் ஒரு வீரராக அடுத்த நடைபெற உள்ள உலகக் கோப்பையை எதிர்நோக்கி ஆவலாக இருக்கிறேன்.

நாங்கள் மிக நன்றாக கட்டமைக்கிறோம். நாங்கள் உலகக் கோப்பையை தக்க வைக்க நினைக்கவில்லை. நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம். மற்ற எல்லா அணிகளையும் போலவே நாங்களும் அதே நிலையில்தான் இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -