“நவம்பர் 19ஆம் தேதி உலக கோப்பையை நாங்கள் உயர்த்துவோம்.. ஆனால் அதுக்கு..!” – பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு பேச்சு!

0
2583
Morgal

பாகிஸ்தான் அணி நேற்று தனது நான்காவது ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் பெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மிகவும் சுமாரான ஒன்றாக இருந்தது. கடைசி 15 ஓவர்களில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திரும்பி வந்த காரணத்தினாலே 62 ரன்கள் என்கின்ற குறைவான வித்தியாசத்தில் தோற்றது. இல்லையென்றால் தோல்வி வித்தியாசம் மிகப்பெரியதாக இருந்திருக்கும்.

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி சிறப்பான முறையில் திரும்பி வந்து ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இது பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் எக்கச்சக்க ரன்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு வாரி வழங்கினார். அவருடைய அதிவேகம் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை எந்த தொந்தரவும் செய்யவில்லை.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறும்பொழுது “கடைசி இரண்டு போட்டிகள் நாங்கள் பேச வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும். பந்துவீச்சில் நாங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். இரண்டு முனைகளில் இருந்தும் நாங்கள் பந்துவீச்சில் அழுத்தம் கொடுக்க வேண்டும். பந்தை ஸ்டெம்ப் லைனில் வைக்க வேண்டும்.

- Advertisement -

நாங்கள் பந்துவீச்சு சூழ்நிலைக்கு ஒத்துப் போகவில்லை. நவம்பர் 19ஆம் தேதி உலகக் கோப்பையை நாங்கள் உயர்த்த வேண்டும் என்றால், பந்துவீச்சில் இரு முனைகளிலும் நாங்கள் அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.

நசிம் ஒரு தரமான பந்துவீச்சாளர். இப்பொழுது பந்துவீச்சு பார்ட்னர்ஷிப் குறித்து கூறும் பொழுது, அதில் அவர் மிகவும் சிறப்பாக எங்களுக்கு செயல்பட்டு இருக்கிறார். அவருடைய புள்ளிவிபரங்கள் அபாரமான ஒன்றாக இருக்கிறது.

தற்பொழுது ஹசன் அலி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் புதிய பந்தில் பந்து வீசுவதற்கு புதிய வேலையை செய்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பில் அவர்கள் தங்களுடைய சந்தர்ப்பத்திற்காக நிற்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருக்கிறது எனவே பந்துவீச்சு என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே மற்றது எல்லாம் நடக்கும்!” என்று கூறியிருக்கிறார்!