ரியான் பராக் தான் எங்களுடைய ஃபினிஷர் அவரது மோசமான ஃபார்ம் பயிற்சியில் மதிப்பீடு செய்யப்படும் = ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சங்கக்கார!

0
222

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தியன் பிரீமியர் லீ கிரிக்கெட் போட்டிகளின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது .. இந்த தொடரில் இதுவரை 25 போட்டிகள் நிறைவு பெற்றிருக்கின்றன .

25 போட்டிகளில் முடிவில் ராஜஸ்தான் மற்றும் லக்னாணிகள் தல நாலு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் வைத்து வருகிறது . ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஆன ஜெய்ப்பூரில் வைத்து நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் லக்னா அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

- Advertisement -

இந்த போட்டியில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி சிறப்பாக துவங்கினாலும் லக்னோ அணியின் பந்துவீச்சு ஆட்டத்தின் பிற்பகுதியில் திறமையாக இருந்தது . மேலும் அவர்களது களத்தெடுப்பும் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

இறுதியாக ஒருவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த தேவதத் படிக்கல் மற்றும் ரயான் பராக் ஆகியோர் முயற்சித்தும் எட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான ரயான் பராக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார் . திறமையான வீரரான இவர் ராஜஸ்தான் அணியின் ஆதரவையும் பெற்று 5 வருடமாக அந்த அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார் . கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

- Advertisement -

இந்த வருடம் ரஞ்சி டிராபி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்ததால் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர்களில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது . ஆனால் இதுவரை நடைபெற்ற ஐந்து ஆட்டங்களிலும் அவர் சொதப்பி இருக்கிறார் . இந்த வருடத்தின் ஐபிஎல் தொடரில் இதுவரை 53 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் ரயான் பராக்.. நேற்றைய போட்டியின் போதும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை . வேகமாக ரன்களை எடுக்க வேண்டிய கட்டத்தில் 12 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது . இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் சங்கக்கார அவருடைய செயல்பாடுகள் குறித்து பயிற்சியின் போது தீர்மானிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள குமார் சங்கக்கார “” ரியான் பராக் களம் இறங்கிய நேரத்தில் அணிக்கு இரண்டு அல்லது மூன்று சிக்ஸர்களே தேவைப்பட்டது . அந்த நேரத்தில் அவர் செய்ய வேண்டிய வேலையும் அது தான் வேகமாக இரண்டு அல்லது மூன்று சிக்ஸர்களை அடிக்க வேண்டியது தான் . எங்களது திட்டம் மதுவாகத்தான் இருந்தது . ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை” எனக் குறிப்பிட்டார் ,

மேலும் தொடர்ந்து பேசிய சங்கக்கார ” ரியான் பராக் ஒருத்தரையான வீரர் எங்களது ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கும் அவருடைய மோசமான பார்ம் பற்றி நாங்கள் பயிற்சியின் போது சரி செய்வோம் . அதன் பிறகு சில போட்டிகள் பார்க்கலாம் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்று தெரிவித்திருக்கிறார் . ஒவ்வொரு வீரர்களும் அவர்களிடம் கூடிய இடமும் அனிக்காகவும் அந்தப் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் சங்ககாரா .