இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் ; பங்களாதேஷ் கேப்டன் சவால்!

0
415
Ind vs Ban

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

குரூப் 1ல் அரை இறுதி சுற்றை எட்ட நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் கடுமையாக மோதி வருகிறது. இங்கிலாந்து அணி அயர்லாந்து அணி உடன் தோல்வியை அடைந்ததால் இந்தக் குழுவில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

குரூப் 2ல் இப்போதைக்கு அரையிறுதிக்கான வாய்ப்பில் பலமாக இருப்பது தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. ஆனால் இந்தியா தென்னாபிரிக்கா அணியிடம் அடைந்த தோல்வி கொஞ்சம் இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தை நாளை அடிலைடு மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டம் மழையால் தடைபட்டாலோ இல்லை இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தாலோ அரையிறுதிக்கு முன்னேறுவதில் பெரிய பின்னடைவு உருவாகும். பங்களாதேஷ அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நிலையில் இந்த ஆட்டம் குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் கூறும்பொழுது ” இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி. இந்திய அணி கோப்பையை வெல்ல இங்கு வந்துள்ளது. ஆனால் நாங்கள் கோப்பையை வெல்ல இங்கு வரவில்லை. இதனால் நாங்கள் இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் வருத்தம் அளிக்கும் ஒரு செயலாக அவர்களுக்கு அமையும். இந்திய அணி எங்களை சந்திக்கும் பொழுது நாங்கள் இந்திய அணியை வீழ்த்தி வருத்தமளிப்போம்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

இந்திய அணி தனது கடைசி இரு ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு ஆட்டத்தில் ஒரு ஆட்டத்தை தோற்றால் கூட இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனை உருவாகிவிடும்!