இத விடுங்க தம்பிங்களா, அடுத்த வருஷம் இந்தியாவுல நடக்குற உலகக்கோப்பை நமக்கு தான் – அக்தர் பேட்டி!

0
1493

அடுத்த வருஷம் இந்தியாவுல நடக்குற உலகக்கோப்பை நமக்கு தான் என்று இப்போதே பேசியுள்ளார் சோயிப் அக்தர்.

டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது எடிசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதின. ம்

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19 ஓவர்கள் முடிவில் எட்டி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்காக இறுதி வரை ஆட்டம் இழக்காமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

1992ம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வெல்வோம் என்று நினைத்த பாகிஸ்தான் அணிக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார் அதன் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

- Advertisement -

பாகிஸ்தான் உலக கோப்பையை இழந்துவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்ற பெருமையே போதும். பல அணிகளுக்கு இது கிடைக்கவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். தொடர் முழுவதும் அவர்கள் செயல்பட்ட விதம் பல அணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது

உலக கோப்பையை ஜெயிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். எங்களுக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் தான் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நாடாக மக்கள் உங்களுடன் இருக்கிறோம். அதே நம்பிக்கையுடன் நாட்டிற்கு திரும்புங்கள். அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலக கோப்பை நமக்கு தான். இம்முறை இறுதிபோட்டி, அடுத்த முறை கோப்பை” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார்.