“நாங்க தான் சாம்பியன் ஆவோம்.. ஏன் தெரியுமா?.. இந்த ரெண்டு காரணத்தால்தான்!” – பாகிஸ்தான் சதாப் கான் ஆச்சரியமான சவால்!

0
1179
Sadhab

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சி போட்டிகள் நாளை மறுநாள் உடன் முடிய இருக்கிறது.

நாளை பங்களாதேஷ் இங்கிலாந்து அணிகள் மற்றும் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. நாளை மறுநாள் இந்திய அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

பாகிஸ்தானை அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் விளையாடி 345 ரன்கள் எடுத்தும் தோற்றது.

பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சு தான் பெரிய பலம் என்று ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை இருந்தது. அதற்குப் பிறகு அவர்களின் பந்து வீச்சு பலவீனம் வெளியே தெரிய ஆரம்பித்தது. தற்பொழுது நசீம் ஷா இல்லாத நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு இன்னும் பலவீனமாக இருக்கிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வீரர் சதாப் கான் கூறுகையில்
“இந்தியாவில் இதுவரையான நிலைமைகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருப்பது போலவேதான் இருக்கிறது. கடைசியில் விளையாடிய பயிற்சி போட்டி கூட ராவல்பிண்டியில் விளையாடியது போலத்தான் இருந்தது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சை கொண்டிருக்கக்கூடிய அணிகள் சாம்பியன் ஆகும். இங்குள்ள ஆடுகளங்கள் பிளாட்டாக இருக்கின்றன. பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருக்கின்றன.

எங்களிடம் உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் ஒரு அணியாக நல்ல பந்துவீச்சை கொண்டிருக்கக் கூடியதாக உணர்கிறேன். நாங்கள் சாம்பியன் ஆவதற்கு நன்றாக செயல்பட வேண்டும். இப்படியான காரணங்களால் நாங்கள் சாம்பியன் ஆக முடியும்!” என்று கூறியிருக்கிறார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணிக்கு பேட்டிங்கில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் வரும் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும்தான் பலமாக இருந்து வருகிறார்கள். இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!