அவர் செஞ்சுரி அடித்துவிட்டார் போனார்.. அங்கிருந்து தான் பிராப்ளம் துவங்கியது – பாட் கம்மின்ஸ் பேட்டி!

0
10946

சில வீரர்களை நான் நம்பினேன். அவர்களுக்கு வாய்ப்புகளும் கொடுத்தேன். எதிர்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை. அதேநேரம் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதனால் தான் தோல்வியை தழுவினோம் என்று போட்டி முடித்த பிறகு பேசியுள்ளார் பாட் கம்மின்ஸ்.

ஆஷஸ் தொடரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 26 ரன்கள் பின் தங்கியிருந்தது. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் மற்றும் 250 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

- Advertisement -

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி பொறுமையுடன் விளையாடி ஆங்காங்கே சில பார்ட்னர்ஷிப்களை அமைத்தது திருப்புமுனையாக அமைந்தது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் விரைவாக விக்கட்டுகளை இழந்த போதிலும் பொறுப்புடன் விளையாடி ஹாரி புரூக் 75 ரன்கள் அடித்துக் கொடுத்தது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது.

கடைசியில் வந்து கிரிஸ் வோக்ஸ் ஆட்டம் இழுக்காமல் நன்றாக பினிஷ் செய்து கொடுத்தார் இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் இலக்கை சேஸ் செய்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடரின் முதல் தோல்வியை சந்தித்த பிறகு பேட்டியளித்த பேட் கம்மின்ஸ் தோல்விக்கான காரணங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“போட்டியின் ஒவ்வொரு நாளிலும் உங்களுக்கு ஏற்றம் இறக்கமாகவே இருந்தது குறிப்பாக முதல் நாளில் 20-25 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது பெருத்த பின்னடைவை கொடுத்தது. மார்ஷ் செஞ்சுரி அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் பிரச்சினை அங்கிருந்து தான். அதன்பிறகு வந்தவர்கள் விக்கெட்டுகளை இழந்தது சிக்கலை கொடுத்தது. சில நேரங்களில் நாங்கள் முன்னணியில் இருந்தோம். சில நேரங்களில் இங்கிலாந்து அணி முன்னணியை பெற்றிருந்தது.

250 ரன்கள் என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கோர். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங்கில் செயல்படவில்லை. லாட்ஸ் மைதானத்தில் வார்னர் நன்றாக விளையாடினார். மிச்சல் மார்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்டுக்கொண்டார். அதன் பிறகு சர்ஜரி செய்து கொண்டார். இப்போது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

அடுத்த போட்டிக்கு வருவதற்குள் சில நாட்கள் நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. இழந்த எனர்ஜியை திரும்ப பெற்று மான்செஸ்டர் மைதானத்தில் விளையாடுவதற்கு முழுமையாக வருவோம். கம்பேக் கொடுப்போம்.” என்றார் கம்மின்ஸ்.