“நாங்கள் குஜராத் டைட்டன்சை பார்த்து பயந்தோம்; அவங்க பைனல் வரக்கூடாதுனு நினைச்சோம்” – அம்பதி ராயுடு ஓபன் டாக்!

0
2901
Ambatirayudu

நடந்து முடிந்த 16 வது ஐபிஎல் சீசனில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த ஐபிஎல் சீசன் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இந்திய வீரர் அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது ஓய்வு கோப்பையோடு மிகச் சிறப்பாக முடிவுக்கு வந்திருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த இடத்தில் உத்வேகம் பெற்றது? யாரை இறுதிப் போட்டிக்கு எதிர் பார்த்தார்கள்? யாரை மிக கடினமாக அணி என்று நினைத்தார்கள்? இன்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறுகையில்
“மகேந்திர சிங் தோனி தனது காலில் இருந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடினார். அவர் தன்னைத் தாண்டி சிந்திக்கிறார். அவர் அனைவருக்காகவும் சிந்திக்கிறார். அவர் இந்தியாவுக்காகவும் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் சிந்திக்கிறார். அதுவே அவரது பெரிய பண்பு.

இந்த வயதில் அவர் செய்து கொண்டிருப்பது நம்ப முடியாதது. தற்பொழுது அவர் செய்வதை வேறு யாரும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன். விளையாடுவது மட்டுமல்ல ஆனால் அவர் சிறப்பாக விளையாடவே செய்கிறார். அவர் செய்வது ஒரு மேஜிக்!

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி எங்களை நாங்கள் உணர்ந்து கொள்வதற்கு உதவியாக இருந்த வெற்றி. அடுத்து கொல்கத்தா அணிவுடன் எங்களுக்குச் சிறிது பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலும், வென்றே ஆக வேண்டிய டெல்லி உடனான ஆட்டத்தில் நாங்கள் மிகச் சிறப்பாக மீண்டு வந்து வென்றோம்.

ஆனால் எங்களுக்கு எப்பொழுதும் குஜராத் அணியைப் பார்த்து பயமாகவே இருந்தது. அவர்கள் இந்த சீசனில் விளையாடும் விதத்திற்கு நாங்கள் அவர்கள் இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அவர்களை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அவர்களின் பந்துவீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!

அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தவர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார். மும்பை இந்தியன் அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தலா மூன்று முறை கோப்பைகளை வென்ற அணியில் இடம் இடம்பெற்றிருந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது!