“கோலியோட நிறுத்திட்டோம்.. நாம இவரை கொண்டாடாம விட்டது பெரிய தப்பு” வெடிக்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
1548
ICT

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என வென்று இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தச் சுற்றுப்பயணத்தில் அடுத்த தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி 27ஆம் தேதியும் இரண்டாவது போட்டி 29ஆம் தேதியும் மூன்றாவது போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதியும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை உருவாக்குவதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்திய அணியில் தற்பொழுது மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இருவரும் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயத்தின் காரணமாக இடம்பெற மாட்டார்கள் என்கின்ற சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக இவர்கள் இருவருக்குமான மாற்று வீரர்களை கண்டறிவது தற்போது இந்திய அணி நிர்வாகத்திற்கு மிக முக்கியமான வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த இடங்களுக்கு சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோர் போட்டியிட்டு வருகிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முக்கியமான ஒரு தொடராகும்.

- Advertisement -

தற்பொழுது கேப்டன் ரோகித் சர்மாவை பற்றி பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “கேப்டனில் இருந்து தொடங்குவோம். அவரது பெயரை முதலில் எடுத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கான விவாதம் முடிந்தது. அவர்தான் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு தொலைவில் அவர் இல்லை. நாம் அவரை போதுமான அளவு கொண்டாடவில்லை. இது நம்முடைய கிரிக்கெட் போர்டு தாண்டிய தவறு.

ரோஹித் சர்மா முழுமையான வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர். ஆனால் அவர் விவாதத்தின் மையமாகவோ ஈர்ப்பின் மையமாகவோ இருக்கவில்லை. ஏன் இப்படி எல்லாம் இல்லை என்கின்ற விஷயத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் ரோகித் சர்மா ஒரு ரன்-வே மேட்ச் வின்னர்.

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அவர் ஐந்து சதங்கள் அடித்தார். ஆனால் அணி வெற்றி பெறவில்லை. அது அவருடைய தவறு கிடையாது. அதுவும் இங்கிலாந்தில் வைத்து அவர் நிறைய ரன்கள் எடுத்தார். தற்பொழுது அவரே கேப்டன் ஆகவும் துவக்க வீரராகவும் இருக்கிறார் இதில் எந்த சந்தேகமும் கிடையாது! என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்