“நேத்து பயிற்சி செய்றப்ப இதைப் பார்த்தோம்!” – திட்டம் போட்டு வேலை செய்த ரோகித் சர்மா டீம்!

0
222
Rohitsharma

நாக்பூரில் இன்று நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ஆஸ்திரேலிய ரசிகர்களை தாண்டி இந்த தொடருக்கு உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் இன்று இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார்!

- Advertisement -

டாஸ் வென்ற பிறகு பேசிய அவர்
” நாங்கள் பேட்டிங் செய்யப் போகிறோம். ஆடுகளத்தில் நடுப்பகுதி ஒரு சமமான அழகாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பெரிய தொடரை தொடங்குவதற்கு காத்திருக்க முடியாது. நாங்கள் நல்ல தயாரிப்பை மேற்கொண்டு இருக்கிறோம் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்” என்று கூறினார்!

இதற்கடுத்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” டாஸ் ஜெயித்து இருந்தால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம். விக்கெட் நன்றாக டிரையாக இருக்கிறது. ஸ்பின்னர்களுக்கு இங்கு எந்த அளவுக்கு உதவி இருக்கும் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். நேற்று நாங்கள் பயிற்சியை இங்கு துவங்கிய பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதலில் பந்தின் தையல் அசைவு இருந்தது. கடந்த ஐந்து ஆறு நாட்களாக நாங்கள் நல்ல தயாரிப்பை செய்துள்ளோம். எங்களிடம் உள்ள சிறந்தவைகளில் நல்ல பயிற்சியை மேற்கொண்டோம். இந்த தொடரின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இது ஒரு செஷனில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது. இது ஒரு நீண்ட தொடர். அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் கே எஸ் பரத் சூரியகுமார் யாதவ் அறிமுகம் ஆகிறார்கள்” என்று கூறினார்!

இந்திய அணி பயிற்சி செய்தபோது புதிய பந்தில் ஆரம்பத்தில் நல்ல நகர்வு இருந்திருக்கிறது. இதை உணர்ந்த இந்திய அணி புதிய பந்தில் ஸ்விங் செய்வது மற்றும் பந்தின் தையலை பயன்படுத்துவது என்று முடிவு செய்து ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே வெளியேற்றி அசத்தியது. பயிற்சியில் கண்ட ஒரு விஷயத்தை ஆட்டத்தில் மிக அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறது இந்திய அணி!

- Advertisement -